IND vs ENG : எங்களுடன் ஜெயித்தால் சூப்பர் ஸ்டார்கள். ஆனால் தோற்றால் இந்திய அணிக்கு இந்த நிலைமைதான் – மொயின் அலி

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டி மழையால் ரத்தானது காரணமாக இந்திய அணி

Moeen-ali
- Advertisement -

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டி மழையால் ரத்தானது காரணமாக இந்திய அணி 11 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

india

- Advertisement -

அடுத்ததாக இந்திய அணி வரும் 30ம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது 2 அணிகளுக்குமே இந்த போட்டியை முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. ஏனெனில் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று கருதப்படும் இந்த இரண்டு அணியும் மோதுவதால் இந்த போட்டிக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மொயின் அலி இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் இந்திய அணி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த தொடரில் விராத் கோலியின் விக்கெட்டை எடுக்க பலரும் தடுமாறி வருவதை நாம் பார்த்து வருகிறோம். அவரை வீழ்த்துவது சற்று கடினம் தான் ஒத்துக்கொள்கிறேன். இருப்பினும் நாளைய போட்டியில் அவரை நான் எளிதாக வீழ்த்துவேன். கோலியை வீழ்த்தி விட்டால் இந்திய அணியை எளிதாக வீழ்த்திவிடலாம்.

Kohli

மேலும் நாளை நடக்க உள்ள போட்டியில் எங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிக அளவில் இருக்கும் என்பதால் எங்களுக்கு அது பக்கபலம் தான். இந்திய அணிக்கு அது சற்று நெருடலாக இருக்கும். நாளைய போட்டியில் இந்திய அணி எங்களை வீழ்த்தினால் அவர்கள் சூப்பர் ஸ்டார்களாக இந்தியாவுக்கு திரும்புவார்கள். இல்லையெனில் அவர்களது நாட்டு ரசிகர்கள் அவர்களை வசை பாடுவார்கள் என்று காட்டமான பேட்டி ஒன்றினை மொயின் அலி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement