அந்த இந்திய வீரர் தான் என்னோட இன்ஸ்பிரேஷன். அவரை மாதிரியே நான் இருக்கனும்னு எனக்கு ஆசை – மிட்சல் ஸ்டார்க்

Mitchell Starc
- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த 17-ஆம் தேதி துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியானது இரண்டாவது நாளே முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Starc

- Advertisement -

இந்நிலையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் போது தென்னாப்பிரிக்க வீரர் ராசி வேண்டர் டுசைன் விக்கெட்டை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 300-ஆவது விக்கெட்டை கைப்பற்றி அசத்தியிருந்தார். இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 74 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 301 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியுள்ளார்.

இதன் மூலம் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த இடதுகை பந்துவீச்சாளர்களின் பட்டியலில் அவர் எட்டாவது இடத்தில் உள்ளார். இந்நிலையில் மிட்சல் ஸ்டார்க் தனது 300-வது விக்கெட்டை வீழ்த்திய பின்னர் பேசிய சில விடயங்கள் தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு வியப்பாக அமைந்துள்ளது. ஏனெனில் அவர் இந்திய ஜாம்பவான் குறித்து தனது கருத்தினை பகிர்ந்து அவர்தான் தனது குரு என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Zaheer-Khan

இது குறித்து அவர் பேசுகையில் : நான் இளம் வயதில் இருந்தே பந்துவீசி வருகிறேன். அப்போதெல்லாம் இந்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஜாஹீர் கானை பார்த்து மிகவும் ஆச்சரியப்படுவேன். ஏனெனில் அவரால் இரண்டு பக்கங்களிலும் பந்தினை ஸ்விங் செய்ய முடியும். அதோடு அவர் நேர்த்தியாக பந்து வீசும் முறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே அவரைப் போலவே ஸ்விங் செய்து பந்துவீச வேண்டும் என்று ஆசைப்படுவேன்.

- Advertisement -

அந்த வகையில் ஜாஹீர் கான் தான் என்னுடைய கிரிக்கெட் இன்ஸ்பிரேஷன் என்று மிட்சல் ஸ்டார்க் வெளிப்படையாக பேசியுள்ளார். இந்திய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஜாஹீர் கான் 311 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான ஜாஹீர் கானை பெருமையாக பேசியுள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : என்ன மனசுயா இந்த மனுஷனுக்கு. பாக் ரசிகருக்காக தடுப்பு வேலி மீது ஏறிய மெக்கல்லம் – என்ன நடந்தது?

இப்படி ஒரு ஜாம்பவானை இந்திய அணி பவுலிங் கோச்சாக நியமித்தால் அது வளர்ந்து வரும் இந்திய இளம் வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement