- Advertisement -
உலக கிரிக்கெட்

ஆம்ப்ரோஸ் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோரது சாதனையை முறியடிக்க காத்திருக்கும் மிட்சல் ஸ்டார்க் – விவரம் இதோ

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட மாபெரும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது நாளை நவம்பர் 21-ம் தேதி துவங்கி அடுத்த ஜனவரி 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. உலகின் தலைசிறந்த 2 அணிகளான இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிட்சல் ஸ்டார்க் நிகழ்த்த இருக்கும் மாபெரும் சாதனை :

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 2025 ஆஷஸ் தொடரானது நாளை பெர்த் மைதானத்தில் துவங்க இருக்கும் வேளையில் இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அனுபவ வீரரான ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக வழிநடத்த இருக்கிறார். ஏனெனில் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக முதல் போட்டியை தவற விட இருக்கிறார்.

- Advertisement -

அதனால் அவருக்கு அடுத்து அந்த அணியின் சீனியர் வீரராக இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் முதல் போட்டியில் கேப்டனாக பங்கேற்பார் என்று தெரிகிறது. அதற்கடுத்து இரண்டாவது போட்டியிலிருந்து பேட் கம்மின்ஸ் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆஷஸ் தொடரில் விளையாட இருக்கும் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் மாபெரும் சாதனை ஒன்றிற்காக காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப் போகும் சாதனை யாதெனில் : இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் 402 விக்கெடுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் மேலும் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஆம்ப்ரோஸ்ஸை (405 விக்கெட்டுகள்) பின்னுக்கு தள்ள வாய்ப்புள்ளது. அதேபோன்று மேலும் 13 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை வேகப்பந்து வீச்சாளராக முதலிடத்தில் இருக்கும் வாசிம் அக்ரமை (414 விக்கெட்டுகள்) பின்னுக்கு தள்ளி முதல் இடத்தினை பிடிக்க இருக்கிறார்.

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஹார்டிக் பாண்டியா விளையாட வாய்ப்பில்லை – என்ன காரணம்?

அதோடு ஆஷஸ் போட்டிகளில் இதுவரை 22 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டார்க் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வேளையில் மேலும் 3 விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் இடது கை வேகப்பந்து வீச்சாளராக ஆஷஸ் வரலாற்றில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையும் ஒட்டுமொத்தமாக ஆஷஸ் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தும் 21-ஆவது பவுலராகவும், ஆஸ்திரேலிய சார்பாக ஆஷஸ் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தும் 13-ஆவது பவுலராகவும் சாதனை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -