இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி இருந்தபோது கடைசி நேரத்தில் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர் தற்போது காயத்திற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்த அவர் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகளை தொடர்ந்து வருகிறார்.
ஒருநாள் தொடரை தவறவிட இருக்கும் ஹார்டிக் பாண்டியா :
இதன் காரணமாக அவர் விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் தற்போது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியானது அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த ஒருநாள் தொடரை அவர் தவறவிட இருக்கிறார் என்றும் அதன் பின்னர் நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் இடம் பெறலாம் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
அதற்கு காரணம் யாதெனில் : எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியம் என்பதனால் அந்த தொடரில் அவர் விளையாட வேண்டியது அவசியம். அதன் காரணமாக அவரது பணிச்சுமையையும், காயத்தின் தன்மையும் கணக்கில் கொண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் ஓய்வெடுத்துக் கொள்வார் என்று தெரிகிறது.
அதேவேளையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. இந்திய அணி அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வேளையில் அந்த அணியின் முக்கிய வீரராக ஹார்டிக் பாண்டியா இருப்பதாலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கேப்டன் கில்லும் இல்ல.. து.கேப்டன் ஷ்ரேயாசும் இல்ல.. ஒருநாள் தொடருக்கான கேப்டன் யார் – விவரம் இதோ
அப்படி ஒருவேளை அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதீஷ் குமார் ரெட்டி அந்த ஒருநாள் தொடரில் இடம் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.



