ஆஸ்திரேலியா அணியானது தங்களது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி பெர்த் நகரில் முடிவடைந்த வேளையில் அந்த போட்டியில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அணி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது.
உண்மையிலேயே அப்படி நடக்கும்னு நினைக்கல :
அந்தவகையில் பூஜ்ஜியத்திற்கு ஒன்று (0-1) என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது அடிலெய்டு ஓவல் மைதானத்தில் டிசம்பர் 6-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலியா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 180 ரன்களுக்கு சுருண்டது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்சல் ஸ்டார்க் 14.1 ஓவர்களில் 2 மெய்டன் உட்பட 48 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் துவக்க வீரரான ஜெய்ஸ்வாலை போட்டியின் முதல் பந்தியிலேயே அவர் வீழ்த்தி இருந்தது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து முதல் பந்திலே தான் விக்கெட் வீழ்த்தியது குறித்து பேசியுள்ள மிட்சல் ஸ்டார்க் கூறும் போது : நிச்சயம் அப்படி ஒரு பந்தினை வீச வேண்டும் என்று நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. நான் வழக்கம் போல் தான் முதல் பந்தை வீச தயாராகி யதார்த்தமாக வீசினேன். ஆனால் பந்தில் கூடுதலான ஸ்விங் இருந்தது. அது உண்மையிலேயே எனக்கு மிகவும் உதவியது.
இதையும் படிங்க : இரண்டாவது போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அஷ்வின் சேர்க்கப்பட என்ன காரணம்? – விவரம் இதோ
நேர்மையாக கூற வேண்டும் என்றால் நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. இயல்பான லைன் மற்றும் லென்த்தை பிடித்து வீச வேண்டும் என்று நினைத்தேன். பந்தில் கூடுதல் ஸ்விங் இருந்தது விக்கெட்டாக மாறியது என மிட்சல் ஸ்டார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.