
2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள வேளையில் இந்து தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஹேசல்வுட், மிட்சல் மார்ஷ் ஆகியோர் காயம் காரணமாக விளையாடாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தற்போது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முக்கியமான ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.
ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. அதன் பின்னர் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அரையிறுதிக்கு செல்லும் என்றும் இல்லையென்றால் குரூப் பி பிரிவில் நெட் ரன்ரேட் அடிப்படையில் மிகப்பெரிய திருப்பங்களும் ஏற்படலாம் என்று தெரிகிறது.
இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க் இந்த தொடரில் இருந்து விலகியதற்கு என்ன காரணம்? என்பது குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலக சில முக்கிய காரணங்களும், சில தனிப்பட்ட காரணங்களும் இருக்கின்றன.
அந்த வகையில் எனக்கு இலங்கை தொடரின் போது கணுக்கால் வலி இருந்தது. எனவே அதனை நான் கவனத்தில் கொண்டேன் ஏனெனில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு நான் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். அதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரும் அடுத்து வர இருக்கிறது.
அதற்கும் நான் சரியான முறையில் தயாராக வேண்டும். எனவேதான் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகினேன். மேலும் இந்த மார்ச் மாதம் ஐபிஎல் தொடரிலும் விளையாட இருக்கிறேன். இப்படி அடுத்தடுத்த போட்டிகளின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு தான் எனது உடற்தகுதியை மேம்படுத்தவே இந்த தொடரிலிருந்து விலக முடிவு செய்தேன்.
இதையும் படிங்க : 12784 கி.மீ.. 2023 உ.கோ 9க்கு 9 மைதானம்? அப்போ எங்க போனீங்க.. இந்தியாவை விமர்சித்த ஹுசைனுக்கு ஜாபர் பதிலடி
அதோடு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அந்த போட்டியில் நான் முழு திறனுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் தற்போது முறையான சிகிச்சை மற்றும் ஓய்வை எடுத்து வருவதாக மிட்சல் ஸ்டார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.