
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.
அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போதே அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாகவே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் போட்டிகளில் மோதும் போது களத்தில் வீரர்கள் வார்த்தை போரில் ஈடுபடுவது வழக்கம். ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்களை சீண்டுவதும், இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு பதிலடி கொடுப்பதும் என அதிக வார்த்தை போர்களை நாம் கண்டிருக்கிறோம்.
இந்நிலையில் விராட் கோலிக்கு எதிராக நான் எப்பொழுதுமே ஸ்லெட்ஜிங் செய்ய விரும்புவேன். அவருக்கு எதிரேயானா வார்தைப்போர் சண்டை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று மிட்சல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :
விராட் கோலியுடனான சண்டையை நான் ரசிக்கிறேன். ஏனென்றால் ஒருவருக்கு ஒருவர் எதிராக நாங்கள் பல்வேறு போட்டிகளில் விளையாடி உள்ளோம். நானும் அவரை ஒரு சில முறை எனது பந்துவீச்சில் வீழ்த்தியுள்ளேன். அவரும் எனக்கு எதிராக ரன்களை குவித்துள்ளார். எங்களுக்கு எதிராக நல்ல ஒரு ஆரோக்கியமான பிணைப்பு இருக்கிறது.
இதையும் படிங்க : அதை செய்யாததால் வங்கதேச ஸ்பின்னர்களிடம் நம்பர் ஒன் விராட் கோலி தடுமாறலாம்.. பத்ரிநாத் பேட்டி
விராட் கோலிக்கு எதிராகவோ அல்லது அவருடன் சேர்ந்தோ எப்போது விளையாடினாலும் அது மிகச் சிறப்பான உணர்வை தரும் என்று மிட்சல் ஸ்டார்க் பேசியது குறிப்பிடத்தக்கது.