வருண் திறமையை அங்கயே பாத்தேன்.. துபாயில் சாதகமில்ல.. அதுல ஆஸியை விட இந்தியா பெஸ்ட் கிடையாது.. ஸ்டார்க்

Mitchell Starc
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையில் வென்றது. அதனால் ஆஸ்திரேலியாவை (2) முந்தி 3 முறை சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற முதல் அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. முன்னதாக பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சினைகளால் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடி வெற்றி கண்டது.

ஆனால் துபாயில் ஒரே ஹோட்டலில் தங்கி ஒரே மைதானத்தில் விளையாடிய இந்திய அணிக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சாதகம் கிடைத்ததாக பலரும் விமர்சித்தார்கள். இருப்பினும் அதற்கெல்லாம் கவலைப்படாத இந்தியா களத்தில் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது. அதற்கு முன்பாக 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா 10 மாதத்திற்குள் 2 ஐசிசி கோப்பைகளை முத்தமிட்டுள்ளது.

- Advertisement -

திறமையான வருண்:

அதனால் தற்சமயத்தில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியா மிகச்சிறந்த அணியாக இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சமீபத்தில் பாராட்டினார். இந்நிலையில் துபாயில் இந்திய அணிக்கு எந்த சாதகமும் இல்லை என்று ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வருண் சக்கரவர்த்தியின் திறமையை கொல்கத்தா ஐபிஎல் அணியிலேயே பார்த்ததாகவும் ஸ்டார்க் கூறியுள்ளார்.

மேலும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் வரை தற்சமயத்தில் ஆஸ்திரேலியாவை விட இந்தியா சிறந்த வெள்ளைப்பந்து அணி என்று தங்கள் நாட்டு ரசிகர்கள் சொல்ல மாட்டார்கள் என்றும் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “துபாயில் விளையாடியது சாதகம் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஏனெனில் மற்ற நாடுகளின் வீரர்கள் உலகம் முழுவதிலும் நடைபெறும் டி20 தொடர்களில் விளையாடுகிறார்கள்”

- Advertisement -

துபாயில் சாதகமில்லை:

“ஆனால் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுகின்றனர். எனவே அதை நீங்கள் சாதகம் என்று சொல்ல முடியாது. மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வருடத்திற்கு 5 – 6 டி20 தொடர்களில் விளையாடுவதால் அங்கேயும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்தியா சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதில் எனக்கு ஆச்சரியமில்லை. ஆனால் அந்தத் தொடரில் நான் ஒரு பந்தைக் கூட பார்க்கவில்லை”

இதையும் படிங்க: உலகிலேயே இந்தியாவிடம் மட்டுமே அந்த 3 நாடுகளில் 3 ஃபார்மட்டில் விளையாடும் திறமை இருக்கு.. ஸ்டார்க் பேட்டி

“ஆஸ்திரேலியா விளையாடிய போட்டிகளை மட்டும் அங்கேயும் இங்கேயுமாக கொஞ்சம். கடந்த வருடம் கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தியுடன் நான் விளையாடினேன். பெரிய திறமையைக் கொண்ட அவர் சுவாரசியமான பவுலர். இந்திய அணி சிறந்த வெள்ளைப்பந்து அணியா? என்று கேட்டால் இந்திய ரசிகர்கள் ஆம் என்று சொல்வார்கள். ஆனால் ஆஸ்திரேலியா ரசிகர்கள் இல்லை என்று சொல்வார்கள்” எனக் கூறினார்.

Advertisement