உலகிலேயே இந்தியாவிடம் மட்டுமே அந்த 3 நாடுகளில் 3 ஃபார்மட்டில் விளையாடும் திறமை இருக்கு.. ஸ்டார்க் பேட்டி

Mitchell Starc 2
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதற்கு முன்பாகவே 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா இதையும் சேர்த்து 10 மாதங்களுக்குள் 2 ஐசிசி கோப்பைகளை முத்தமிட்டுள்ளது. அதற்கு முன்பாகவே 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்ற இந்தியா 2023 உலகக் கோப்பை ஃபைனல் வரை சென்றது.

அதன் வாயிலாக தொடர்ந்து 4 ஐசிசி தொடர்களில் ஃபைனல்களுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது. இந்நிலையில் உலகிலேயே இந்தியாவிடம் மட்டுமே 3 வகையான கிரிக்கெட்டில் 3 வெவ்வேறு நாடுகளில் 3 அணிகளை களமிறக்கும் அளவுக்கு ஆழமான திறமை இருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் ஸ்டார்க் வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

- Advertisement -

திறமையான இந்தியா:

அதற்கு ஐபிஎல் மிகவும் முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரே நாளில் டெஸ்ட், ஒருநாள், டி20 வடிவங்களில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியிலும், இங்கிலாந்தில் ஒருநாள் போட்டியிலும், தென்னாபிரிக்காவில் டி20 போட்டியிலும் விளையாடுவதற்கான அணிகளை இந்தியா மட்டுமே கொண்டுள்ளது என்று நினைக்கிறேன்”

“அந்தப் போட்டிகளில் இந்தியா எதிரணிகளுக்கு நல்ல போட்டியை கொடுக்கும். மற்ற நாடுகளால் அதைச் செய்ய முடியாது. ஐபிஎல் தொடரில் விளையாடுவது சாதகமா என்பது எனக்குத் தெரியவில்லை. நாங்கள் உலகம் முழுவதிலும் நடைபெறும் டி20 தொடர்களில் விளையாடும் வாய்ப்பைப் பெறுகிறோம். ஆனால் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுகிறார்கள்”

- Advertisement -

ஸ்டார்க் பாராட்டு:

“அது நம்பர் ஒன் லீக். அதில் அனைத்து இந்திய வீரர்களும் சர்வதேச அளவில் திறமை கொண்ட வீரர்களும் கலவையாக விளையாடுகிறார்கள். எனவே அது மேலே இருக்கிறது. அது பெரிய தொடர் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்கள் அதில் மட்டுமே உட்கார்ந்து இருக்க முடியாது. ஏனெனில் வருடத்தில் 5 முதல் 6 வெவ்வேறு லீக் தொடர்களில் விளையாடும் வீரர்கள் உங்களிடம் இருக்கிறார்கள்”

இதையும் படிங்க: ஆஸியில் இருந்திருந்தா இந்தியாவை தோற்க விட்ருக்க மாட்டேன்.. அந்த தொடரில் விளையாட ரெடி.. புஜாரா பேட்டி

“ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் அந்தத் தொடரில் வாய்ப்பைப் பெறுவார்கள். இருப்பினும் உங்களிடம் நல்ல திறமை இருந்தால் மட்டுமே சிறந்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியும். இந்திய கிரிக்கெட்டின் ஆழம் மிகவும் பெரியது” என்று கூறினார். முன்னதாக கடந்த வருடம் 24.75 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு வாங்கப்பட்ட ஸ்டார்க் கொல்கத்தா அணிக்கு சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல உதவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement