ஆஸியில் இருந்திருந்தா இந்தியாவை தோற்க விட்ருக்க மாட்டேன்.. அந்த தொடரில் விளையாட ரெடி.. புஜாரா பேட்டி

C Pujara
- Advertisement -

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்தது. அதனால் 12 வருடங்களாக சொந்த மண்ணில் தோற்காமல் வென்று வந்த இந்தியாவின் உலக சாதனை வெற்றி நடை முடிவுக்கு வந்தது. அதை விட ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 3 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

அதற்கு பேட்டிங் துறையில் ஜெய்ஸ்வால், நிதிஷ் ரெட்டி போன்ற இளம் வீரர்களை தவிர்த்து மூத்த வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. இந்நிலையில் அந்தத் தொடரில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு தமக்குக் கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாக செடேஸ்வர் புஜாரா கூறியுள்ளார். அந்தத் தொடரில் தாம் விளையாடியிருந்தால் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 3வது முறையாக இந்தியா ஹாட்ரிக் சாதனையை படைத்திருக்கும் என்று புஜாரா ஏமாற்றதுடன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஹாட்ரிக் மிஸ்:

ஏனெனில் 2018-19, 2020-21 ஆகிய அடுத்தடுத்த தொடர்களில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா தோற்கடிக்க புஜாரா முக்கிய பங்காற்றினார். அடுத்ததாக வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதில் இங்கிலாந்து அணி பலவீனமாக இருப்பதாக கூறும் புஜாரா அத்தொடரில் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்தத் தொடரில் இந்தியாவுக்காக விளையாட தயாராக இருப்பதாகவும் கூறும் புஜாரா இது பற்றி பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக ஒரு வீரராக நீங்கள் எப்போதும் இந்திய அணிக்காக விளையாடுவதை விரும்புவீர்கள். வெற்றியைப் பெறுவதற்காக என்னால் முடிந்ததை நான் செய்து வருகிறேன். இந்திய அணிக்கு தேவைப்பட்டால் மீண்டும் நாட்டுக்காக விளையாட நான் தயாராக இருக்கிறேன்”

- Advertisement -

இங்கிலாந்து தொடர்:

“அதற்காகவே நான் உள்ளூரில் தொடர்ந்து விளையாடி வருகிறேன். கடந்த சில வருடங்களாகவே இங்கிலாந்தில் கவுன்டி தொடரிலும் விளையாடி வருகிறேன். உள்ளூரில் நான் நிறைய ரன்கள் குவித்தேன். எனவே மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் அதை 2 கைகளால் பிடித்துக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆஸ்திரேலியாவில் நாம் ஹாட்ரிக் வெற்றியை பெற விரும்பினோம்”

இதையும் படிங்க: தல தோனியை பாக்கனும்.. அஷ்வினுடன் டைம் ஸ்பென்ட் பண்ணனும் – சி.எஸ்.கே உடன் இணைந்ததும் ஜடேஜா ஹேப்பி

“ஆம் ஒருவேளை நான் அங்கே விளையாடிருந்தால் அதை (தோல்வியை) மறுத்திருப்பேன். இம்முறை இந்திய கிரிக்கெட் அணிக்கு இங்கிலாந்தில் நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆண்டர்சன் ஓய்வு பெற்றதால் இங்கிலாந்து அணியின் பௌலிங் கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது. ஸ்டுவர்ட் பிராட் இனிமேலும் அவர்கள் அணியில் இடம் பிடிக்க மாட்டார்” எனக் கூறினார்.

Advertisement