WTC Final : இந்த காலத்துல இப்டி ஒரு பிளேயரா? மிட்சேல் ஸ்டார்க்கை பாராட்டும் இந்திய ரசிகர்கள் – காரணம் இதோ

Mitchell Starc
- Advertisement -

அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவும் 2வது இடம் பிடித்த இந்தியாவும் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதில் கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்த இந்தியா இம்முறை எப்படியாவது கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

starc

- Advertisement -

மறுபுறம் ஐசிசி ஃபைனல்களில் எப்போதுமே அசத்தலாக செயல்பட்டு 5 உலகக் கோப்பையும் டி20 உலக கோப்பையும் வென்றுள்ள ஆஸ்திரேலியா இந்த கோப்பையையும் முதல் முயற்சியிலேயே வெல்லப் போராட உள்ளது. அதனால் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா போன்ற இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆஸ்திரேலியாவின் நட்சத்திர இடது கை வேகப்பந்துவீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் 2015 உலக கோப்பையில் அதிக விக்கெட்களை எடுத்து சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் 2019 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்களை எடுத்த பவுலர் என்ற உலக சாதனையும் படைத்தார்.

என்னா பிளேயர்:
அந்த வகையில் ஐசிசி தொடர்களில் அபாரமாக செயல்பட்டுள்ள அவர் எப்போதுமே தன்னுடைய நாட்டுக்காக தேசப்பற்றுடன் விஸ்வாசமாக விளையாடும் வீரராக அறியப்படுகிறார். ஏனெனில் இந்த நவீன கிரிக்கெட்டில் ஒரு வருடம் நாட்டுக்காக விளையாடினாலும் கிடைக்காத சம்பளத்தை வெறும் 2 மாதத்தில் விளையாடுவதற்கு ஐபிஎல் அணிகள் கொடுக்கின்றன. அதனால் ட்ரெண்ட் போல்ட், ஜேசன் ராய் போன்ற நட்சத்திர வீரர்கள் சொந்த நாட்டை புறக்கணித்து ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் விளையாட முன்னுரிமை கொடுக்கின்றனர்.

அதே போல இந்தியாவின் ஹர்திக் பாண்டியா கோடிகளை கொடுக்கும் டி20 மற்றும் வெள்ளைப்பந்து போட்டிகளில் விளையாடினால் போதும் என்ற கோணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணித்துள்ளார். ஆனால் கடைசியாக 2015 ஐபிஎல் தொடரில் விளையாடிய மிட்சேல் ஸ்டார்க் அதன் பின் தொடர்ந்து ஏலங்களில் பங்கேற்பதை தவிர்த்து விட்டு பணிச்சுமையை நிர்வாகித்து புத்துணர்ச்சியுடன் நாட்டுக்காக களமிறங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் 77 டெஸ்ட் போட்டிகளில் 36 விக்கெட்டுகளை எடுத்து ஏற்கனவே மகத்தானவராக போற்றப்படும் அளவுக்கு அசத்தியுள்ள அவர் ஐபிஎல் தொடரில் கிடைக்கும் பணத்தை விட நாட்டுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே தம்முடைய மிகப்பெரிய லட்சியம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

2018இல் கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டும் ஒரு போட்டியில் கூட விளையாடாத அவர் ஐபிஎல் தொடரை ஏன் புறக்கணிக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சமீபத்திய பேட்டியில் பதிலளித்தது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவுக்காக நீண்ட காலம் விளையாடுவதற்காக சிலவற்றை நான் செய்யக்கூடாது என்று முடிவெடுத்துள்ளேன். அதில் நான் மிகவும் சாதுரியமாக செயல்பட விரும்புகிறேன். ஆம் ஐபிஎல் தொடரில் விளையாடினால் நல்ல பணம் கிடைக்கும். ஆனால் அதை விட நான் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்”

Starc 1

“என்னால் 100 போட்டிகளில் விளையாட முடியுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அந்த இலக்கை தொட்டால் அது மிகவும் நல்ல உணர்வாக இருக்கும். அதைத் தொடும் அளவுக்கு என்னிடம் இன்னும் திறமை இருப்பதாக நம்புகிறேன். கடந்த 10 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவது நிறைய வலிகளும் வருகின்றன. ஆனால் அதை கடந்து வெற்றிகரமாக விளையாடுவதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க:WTC Final : அந்த சம்பவங்களை செஞ்ச அப்றம் தான் ஆஸ்திரேலியா அடங்கி இந்தியாவ மதிக்குறாங்க – விராட் கோலி மாஸ் பேட்டி

அதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் இந்த காலத்தில் பணத்துக்காக தாய் நாட்டை புறக்கணிக்கும் பல வீரர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு வீரரா என்று அவரை பாராட்டுகின்றனர். அத்துடன் 33 வயதாகும் அவர் சமீப காலங்களாகவே சற்று தடுமாற்றமுடன் செயல்படுவதால் ஆஸ்திரேலியாவில் விமர்சனங்கள் காணப்படுகின்றன. அது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “என்னால் சிறந்தவற்றை முயற்சிக்கிறேன். இருப்பினும் யாரோ என்னை துரத்த போகிறார்கள். விரைவில் ஒரு இடது கை பவுலர் வந்ததும் என்னுடைய நிலையை நான் அறிவேன்” என்று கூறினார்.

Advertisement