7 வருடங்கள் கழித்து ஐபிஎல் 2022இல் மீண்டும் மிரட்ட வரும் முக்கிய வீரர் ! முழு விவரம் இதோ

Advertisement

ஐபிஎல் 2022 சீசனை இந்தியாவிலேயே நடத்துவதற்கான அனைத்து வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இந்த வருடம் புதியதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 முக்கிய நகரங்களை மையமாகக் கொண்ட 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

ipl trophy

இதன் காரணமாக இந்த 2 அணிகளுக்கும் தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வண்ணம் சிறிய அளவில் அல்லாமல் இந்த சீசனுக்காக மெகா ஏலம் நடைபெறவுள்ளது, இந்த ஏலத்துக்கு முன்பாக ஏற்கனவே உள்ள பழைய 8 அணிகள் தாங்கள் விரும்பும் வீரர்களை தக்க வைத்துக் கொண்டதுடன் அவர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளன.

- Advertisement -

மிரட்ட போகும் ஆஸ்திரேலிய வீரர்:
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 2 அணிகளும் அதிகபட்சமாக 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ள முன்னுரிமையும் அளிக்கப்பட்டுள்ளது, இதை அடுத்து ஐபிஎல் 2022 தொடரின் மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய 2 தேதிகளில் நடைபெற உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த மெகா ஏலத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மற்றும் அதிரடி வேகப்பந்து வீச்சாளரான மிட்சேல் ஸ்டார்க் பங்கேற்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுபற்றி கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையதளத்தில் அவர் கூறுகையில்,

mitchell starc

“எனது ஆவணங்களை பெறுவதற்கு எனக்கு இன்னும் 2 நாட்கள் உள்ளது, எனவே வலை பயிற்சிக்கு முன் இன்று ஏதாவது செய்ய வேண்டும், நான் எனது பெயரை இன்னும் குறிப்பிடவில்லை ஆனால் அதை முடிவு செய்ய இன்னும் 2 நாட்கள் உள்ளன. போட்டி அட்டவணை எதுவாக இருந்தாலும் அது நிச்சயமாக மேஜையில் இருக்கும்”என கூறியுள்ள.

- Advertisement -

அவர் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்கேற்பதற்கான ஆவணங்களில் விரைவில் கையெழுத்திட போவதாகவும், இந்த முறை கிரிக்கெட் அட்டவணை எப்படி இருந்தாலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Mitchell starc

மீண்டும் ஸ்டார்க்:
“கடந்த 6 வருடங்களாக நான் பங்கேற்கவில்லை, கடந்த காலங்களில் குறிப்பிடும் அளவுக்கு அதிகப்படியான டி20 போட்டிகள் இருந்ததாலும் இந்த வருடத்தின் இறுதியில் டி20 உலக கோப்பை நடைபெறுவதாலும் இதை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எங்களைப் போன்ற பல வகையான கிரிக்கெட் வீரர்களுக்கு அட்டவணையை பொறுத்து திட்டமிடல் வேண்டியுள்ளது என்று தெவித்துள்ளார்.”

- Advertisement -

இது பற்றி மேலும் தெரிவித்த அவர், வரும் அக்டோபர் மாதம் தங்களது சொந்த மண்ணில் நடைபெற உள்ள 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வண்ணம் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பங்கு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Mitchell starc

நவீன கிரிக்கெட்டில் உலகின் ஒரு தலை சிறந்த பந்து வீச்சாளராக வலம் வரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டார்க் கடந்த 2012 முதல் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வந்தார், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 2015 வரை விளையாடிய அவர் ஐபிஎல் தொடரில் இதுவரை 27 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

இருப்பினும் கடந்த 6 வருடங்களாக அதிகப்படியான பணிச்சுமையை குறைத்துக் கொண்டு தனது சொந்த நாட்டுக்காக அதிகம் விளையாட வேண்டும் என்பதற்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்து வந்தார். ஆனால் அடுத்த 6 மாதங்களுக்கு பின் தங்களின் சொந்த ஊரில் 20 ஓவர் உலக கோப்பை நடைபெறுவதை ஒட்டி அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் காரணத்தால் இவரை ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்க அனைத்து அணிகளும் விரும்பும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement