AUS vs RSA : கையில் ரத்தம் சொட்ட அர்ப்பணிப்புடன் போராடும் ஆஸி வீரர், திணறும் தெ.ஆ – இந்தியாவுக்கு பிரகாசமாகும் வாய்ப்பு

Aus vs RSa
- Advertisement -

ஆஸ்திரேலியாக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா முதல் போட்டியில் தோற்று ஆரம்பத்திலேயே பின்தங்கியது. அந்த நிலையில் டிசம்பர் 26ஆம் தேதியன்று உலகப் புகழ் பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சில் சுமாராக செயல்பட்ட தென்னாபிரிக்கா வெறும் 189 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் டீன் எல்கர் 26, பவுமா 1 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்கோ யான்சென் 59 ரன்களும் கெய்ல் வெரின் 52 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 5 விக்கெட்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் அபாரமாக பேட்டிங் செய்து 575/8 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணிக்கு உஸ்மான் கவாஜா 1, மார்னஸ் லபுஸ்ஷேன் 14 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் 3வது விக்கெட்டுக்கு 239 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் மறுபடியும் அசத்தலாக பேட்டிங் செய்த தொடக்க வீரர் டேவிட் வார்னர் 1086 நாட்கள் கழித்து சதமடித்து தான் மீதான விமர்சனங்களை அடித்து நொறுக்கினார்.

- Advertisement -

இந்தியாவுக்கு சாதகம்:
அத்துடன் தன்னுடைய 100வது போட்டியில் சதமடித்த 2வது ஆஸ்திரேலிய வீரராக சாதனை படைத்த அவர் 200* ரன்கள் குவித்து 100வது போட்டியில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலியா வீரர் என்ற சரித்திரத்தையும் படைத்து ரிட்டயர்ட் ஹர்ட்டாகி சென்றார். அவருக்குப் பின் ட்ராவிஸ் ஹெட் 51 கேமரூன் க்ரீன் 51* என முக்கிய வீரர்கள் அரை சதமடித்த நிலையில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்து 111 ரன்கள் விளாசி அவுட்டானார். தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 3 விக்கெட்களை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 386 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை துவங்கிய தென்னாபிரிக்காவுக்கு கேப்டன் டீன் எல்கர் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த போது 15/1 என தடுமாறும் அந்த அணிக்கு களத்தில் எர்வீ 7* ரன்களுடனும் டீ ப்ரூய்ன் 6* ரன்களுடனும் உள்ளனர். முன்னதாக ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் முதல் இன்னிங்ஸ் பீல்டிங் செய்யும் போது இடது கையின் நடு விரலில் கடுமையான காயத்தை சந்தித்தார். குறிப்பாக ரத்தம் சொட்டும் அளவுக்கு அதிகப்படியான காயத்தை சந்தித்த அவர் கட்டுப் போட்டுக் கொண்டு தொடர்ந்து விளையாடினார்.

- Advertisement -

அந்த நிலையில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும் போது தேவையான முதலுதவிகளை எடுத்துக்கொண்ட அவர் ஓரளவு வலி குறைவாக உணர்ந்த காரணத்தால் மீண்டும் 2வது இன்னிங்ஸில் பந்து வீசுவதற்கு துவங்கினார். ஆனால் இடது கையின் நடு விரலில் அதிக அழுத்தத்தை கொடுத்து பந்து வீசிய காரணத்தால் அது வரை எடுத்துக்கொண்ட முதலுதவிகள் வீணாகும் வகையில் அவரது காயம் மேலும் அதிகமாகி ரத்தம் வெளி வந்தது. அது அவரது கால் சட்டையில் விழுந்த நிலையில் மீண்டும் கட்டுப்போட்டுக் கொண்டு தொடர்ந்து தேசத்துக்காக அர்ப்பணிப்புடன் அவர் பந்து வீசியதை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

குறிப்பாக ஏற்கனவே நிறை வீரர்கள் காயம் என்ற பெயரில் நாட்டுக்காக ஓய்வெடுப்பதும் ஐபிஎல் தொடரில் பணத்துக்காக விளையாடுவதும் வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் இவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரை புறக்கணித்து நாட்டுக்காக விளையாடும் நிலையில் காயத்துடன் விளையாடுவது உண்மையாகவே அவருடைய தேசப்பற்றை காட்டுகிறது.

இதையும் படிங்கதோனியின் மகளுக்கு கால்பந்து ஜாம்பவான் மெஸி அனுப்பிய அன்பு பரிசு – இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நெகிழ்ச்சி

முன்னதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் தோற்ற தென் ஆப்பிரிக்கா புள்ளி பட்டியலில் 2வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு சரிந்துள்ளது. அதனால் 2வது இடத்துக்கு இந்தியா முன்னேறிய நிலையில் இப்போட்டியிலும் ஆஸ்திரேலியா வெல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. எனவே இப்போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் 2023 லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்பு மேலும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement