மும்பை டெஸ்ட்ல ஆடாமலே 1 லட்சரூபாய் பரிசாக பெற்ற நியூசிலாந்து வீரர் – எதற்கு தெரியுமா?

Santner-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டி நேற்று நான்காவது நாளில் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் 4 ஆவது இன்னிங்சில் நியூசிலாந்து அணிக்கு 540 ரன்களை வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 200 ரன்கள் கூட அடிக்காமல் ஆட்டமிழந்த நியூசிலாந்து அணியானது 372 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது.

ind 1

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடாத நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் இந்த இரண்டாவது போட்டியின் முடிவில் ஒரு லட்ச ரூபாய் பரிசாக பெற்ற விடயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதன்படி இந்த இரண்டாவது டெஸ்டில் சான்ட்னர் விளையாடவில்லை என்றாலும் அவ்வப்போது மாற்று வீரராக பீல்டிங் செய்து வந்தார்.

- Advertisement -

அப்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 46 ஆவது ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு பந்தை தூக்கி அடிக்க அதனை பவுண்டரி லைனில் இருந்த மிட்செல் சான்ட்னர் சாதுரியமாக எட்டிப்பிடித்து பந்தை மீண்டும் உள்ளே தூக்கி எறிந்தார். கிட்டத்தட்ட சிக்ஸ் சென்று விட்டது என்று அனைவரும் நினைத்த நிலையில் அந்த அட்டகாசமான பீல்டிங் மூலம் 5 ரன்களை காப்பாற்றிக் கொடுத்தார்.

Santner

இதன் காரணமாக அவரின் இந்த முயற்சியை பாராட்டி “Best Save of the Match” என்ற பெயரில் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இந்த விவரமானது தற்போது அதிகளவு பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : முடிவுக்கு வந்த ஹர்பஜனின் கிரிக்கெட். புது ரூட்டில் ஐ.பி.எல் தொடரில் பயணிக்க திட்டம் – விவரம் இதோ

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்த நியூசிலாந்து அணியானது தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 1 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்து பரிதாபமாக வெளியேறியது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் மீண்டும் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 124 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement