இந்திய அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியானது 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து கோப்பையை தவறவிட்டது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 255 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து அணி 159 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
எங்களது அணியின் வீரர்களை நினைத்தால் பெருமையாக இருக்கு : மிட்சல் சான்ட்னர்
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சம் சான்ட்னர் பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : உண்மையிலேயே இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இருந்தாலும் அதைவிட எங்களது அணியின் வீரர்கள் இந்த தொடர் முழுவதுமே செயல்பட்ட விதத்தை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது.
ஏனெனில் இதுபோன்ற ஒரு ஐசிசி தொடரில் பல்வேறு சவால்கள் இருக்கும் அதனை கடந்து நாங்கள் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தோம். இந்த இறுதி போட்டியிலும் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு தோல்வியை சந்தித்துள்ளோம் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி எங்களை வீழ்த்திவிட்டது. இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தின் மத்தியில் இந்திய அணி சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அதேவேளையில் நான் எங்களது அணியின் வீரர்களின் செயல்பாட்டையும் பாராட்டியாக வேண்டும். இந்த தொடரில் முக்கியமான போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளோம். இன்று இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் இந்திய அணி அவர்களது சொந்த மண்ணில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்தியா போன்ற பலமான அணிக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் விளையாடும் போது மிகப்பெரிய அழுத்தம் இருக்கும்.
இதையும் படிங்க : என்னை நம்பி அந்த 2 பேரும் வாய்ப்பு குடுத்தாங்க.. அவங்க நம்பிக்கையை காப்பாத்திட்டேன் – சூரியகுமார் யாதவ் மகிழ்ச்சி
இந்த போட்டியில் அதனை சமாளித்து சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடர் முழுவதுமே எங்களது அணியின் வீரர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் முன் நின்று நாங்கள் இந்த தொடரின் இறுதி போட்டி வரை வந்துள்ளோம். இந்த இறுதி போட்டியில் எங்களை விட சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி எங்களை வீழ்த்தியுள்ளது. அவர்களுக்கும் நாங்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் என மிட்சல் சான்ட்னர் பேசியது குறிப்பிடத்தக்கது.



