- Advertisement -
உலக கிரிக்கெட்

ஐ.சி.சி தொடர் என்று வந்தாலே ரச்சின் ரவீந்திரா இதை செய்து விடுகிறார் – மிட்சல் சான்ட்னர் பாராட்டு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யின் மூலம் நடத்தப்பட்டு வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது இதுவரை 8 முறை நடைபெற்று முடிந்துள்ள வேளையில் ஒன்பதாவது சுழற்சியானது பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, மற்றும் வங்கதேச அணிகள் இடம்பெற்றுள்ளன.

ரச்சின் ரவீந்திரா இந்த விடயத்தில் கில்லாடி : மிட்சல் சான்ட்னர்

அதேபோன்று பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த தொடரின் இரு பிரிவுகளிலும் இடம் பெற்றுள்ள நான்கு அணிகளும் லீக் சுற்று போட்டிகளில் விளையாடி லீக் சுற்றுகளின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

- Advertisement -

அதன் பின்னர் அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வகையில் இந்த தொடரானது அட்டவணைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது குரூப் சுற்று போட்டிகள் முடிவடையவுள்ள வேளையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் விளையாடிய நியூசிலாந்து அணி 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நிலையில் 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் சேர்த்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினார்.

- Advertisement -

குறித்து பாராட்டி பேசிய அந்த அணியின் கேப்டன் மிட்சல் சான்டனர் கூறுகையில் : ரச்சின் ரவீந்திரா ஐ.சி.சி தொடர்கள் என்று வந்தாலே பேட்டிங் செய்ய மிகவும் விரும்புகிறார். ஐசிசி தொடர் என்று வந்தாலே அவர் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஒருபோதும் அவர் இந்த போட்டியிலிருந்து வெளியேறவில்லை. டாம் லேதமுடன் இணைந்து அவர் அமைத்த பாட்னர்ஷிப் எங்களது அணியின் வெற்றிக்கு மிகவும் உதவியது.

இதையும் படிங்க : ஐசிசி பணம் 383 கோடியில் பாதியை சுருட்டிட்டீங்களா? பாகிஸ்தான் வாரியத்துக்கு கைப் கேள்வி

அடுத்த போட்டியில் இந்தியாவை எதிர்கொள்வது சவாலாக இருந்தாலும் அதனை நாங்கள் சிறப்பாக செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போதைக்கு எங்கள் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த தொடரினை கைப்பற்றவும் வாய்ப்புள்ளதாக மிட்சல் சான்ட்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -