ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்துள்ளது. மார்ச் 9ஆம் தேதி துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் தங்களது மூன்றாவது ஐசிசி கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்தது. மறுபுறம் நியூசிலாந்து மற்றும் ஒரு ஏமாற்றமான தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் 20 – 25 ரன்களை எக்ஸ்ட்ரா அடித்திருந்தால் வெற்றி வாய்ப்பு கூடுதலாக இருந்திருக்கும் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்சேல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ஆனால் அப்போது ஜடேஜா, வருண், அக்சர், குல்தீப் ஆகிய 4 உலகத்தரமான இந்தியாவின் ஸ்பின்னர்கள் தங்களை ம்டக்கியதே தோல்விக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
தரமான இந்தியாவிடம் தோல்வி:
மீதி வெற்றியை பேட்டிங்கில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி பறித்ததாக அவர் கூறியுள்ளார். எப்படி இருந்தாலும் திறமையான இந்திய அணியிடம் தோற்றோம் என்று பெருமையுடன் பேசிய மிட்சேல் இது பற்றி கூறியது பின்வருமாறு. “இது எங்களுக்கு நல்ல தொடராக அமைந்தது. எங்களுக்கு சவால்கள் இருந்தாலும் அதையும் தாண்டி நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம்”
“இன்று நல்ல அணியாக செயல்பட்டவர்களிடம் நாங்கள் தோற்றோம் அவ்வளவு தான். பல்வேறு நேரங்களில் எங்களுடைய பல்வேறு வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். கேப்டனாகவும் அணியாகவும் நீங்கள் அதைத்தான் கேட்பீர்கள். பவர் பிளே ஓவர்களில் நாங்கள் சில விக்கெட்டுகளை இழந்ததால் மீண்டும் சிறப்பாக விளையாட வேண்டி இருந்தது. ஆனால் அப்போது நன்றாக பவுலிங் செய்த இந்தியாவின் ஸ்பின்னர்களுக்கு பாராட்டு கொடுக்க வேண்டும்”
இந்தியாவின் சிறப்பான ஆட்டம்:
“அவர்கள் அணியில் இருக்கும் நால்வருமே உலகத்தரம் வாய்ந்தவர்கள். நாங்கள் எதிர்பார்த்த இலக்கில் 20 – 25 ரன்கள் குறைவாக எடுத்தோம். அதை வைத்து வெற்றிக்கு முடிந்தளவுக்கு போராட முயற்சித்தோம். கிளன் பிலிப்ஸ் தொடர்ந்து இப்படி அபாரமான கேட்ச்களை பிடித்து வருகிறார். இது போன்ற மைதானத்தில் பவர் பிளே தான் நீங்கள் பேட்டிங் செய்வதற்கு சிறந்த நேரமாகும்”
இதையும் படிங்க: இதை செஞ்ச ரசிகர்களுக்கு நன்றி.. சரியான நேரத்தில் வருண் அசத்திட்டாரு.. இந்தியாவின் வெற்றி பற்றி ரோஹித்
“அதில் கில் – ரோஹித் சிறப்பாக பயன்படுத்தினர். குறிப்பாக ரோஹித் சர்மா பந்துக்கு நிகராக ரன்கள் எடுத்தது எங்களை பின்னங்கால் வைக்க வைத்தது. ரச்சின் ரவீந்திரா இவ்வளவு இளம் வயதிலேயே நல்ல புரிவை கொண்டு முக்கியமான நேரங்களில் அசத்துகிறார். அவருக்கு பெரிய வருங்காலம் இருக்கிறது. முதல் முறையாக கேப்டனாக ஐசிசி தொடரில் நான் மகிழ்ச்சியாக விளையாடினேன். எங்களுடைய பல்வேறு வீரர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் முன் வந்து அசத்தினார்கள். இது நல்ல தொடராக அமைந்தது” என்று கூறினார்.



