எங்க ஊர்ல கூட இது கிடைக்காது.. சுந்தரை பாத்து தான் கோலியையும் இந்தியாவையும் சாய்த்தேன்.. சான்ட்னர் பேட்டி

Mitchell Santner
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 36 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக புனேவில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியிலும் இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. அக்டோபர் 24ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து கான்வே 76, ரவீந்திரா 65 ரன்கள் 259 ரன்கள் எடுத்தது.

இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர் 7, அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் விளையாடிய இந்தியா மோசமாக பேட்டிங் செய்து வெறும் 156 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 38 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் பின் 103 ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் நியூசிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 198-5 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

சொதப்பிய விராட் கோலி:

அதனால் 301 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நியூசிலாந்து இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசமாகியுள்ளது. முன்னதாக 2015ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மிட்சேல் சான்ட்னர் இப்போட்டியில் தான் முதல் முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார். இந்நிலையில் தங்களுடைய நாட்டில் கூட இந்தளவுக்கு சுழலுக்கு சாதகமான பிட்ச் கிடைக்காது என்று அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் விராட் கோலி மோசமான ஷாட்டை அடித்து இப்படி அவுட்டாவார் என்று தாமே எதிர்பார்க்கவில்லை என தெரிவிக்கும் அவர் வாஷிங்டன் சுந்தரை பார்த்தே 7 விக்கெட்டுகள் எடுத்ததாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை அப்படி அவுட்டாக்கியது அதிகமான ஆச்சரியம். அது மெதுவான பந்து. அப்படி பந்தை மெதுவாக வீசியதே இன்று சாவியாக இருந்தது”

- Advertisement -

சுந்தரை பார்த்து:

“நான் கோணங்களை பின்பற்றி விளையாட விரும்பினேன். நேற்று வாஷிங்டன் சுந்தர் பந்து வீசியதை பார்த்தேன். நாமும் அதே போல செய்யலாம் என்று நினைத்தேன். குறிப்பாக சரியான வேகத்தை கண்டறிய முயற்சித்தேன். போட்டி செல்ல செல்ல அது தாமாக மாறியது. அதை 90கி.மீ வேகத்தை அளவுக்கு வைத்துக்கொள்ள முயற்சித்தேன். எங்களுடைய சொந்த ஊரில் கூட இது போன்ற பிட்ச் கிடைப்பதில்லை”

இதையும் படிங்க: 120க்கு அவுட்டாக்க வேற வழிய பாருங்க.. ரோஹித்தின் மோசமான கேப்டன்ஷிப்பை விளாசிய ரவி சாஸ்திரி

“இங்கே ஸ்பின்னர்களுக்கு நல்ல ஆதரவு கிடைப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் நிலையில் எங்களை கொண்டு வந்துள்ளது நல்ல உணர்வை கொடுக்கிறது. இங்கே பேட்டிங் செய்வது எளிதல்ல. ஆனால் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் அதை நன்றாக செய்து பார்ட்னர்ஷிப் அமைத்தது சாவியாக அமைந்தது” என்று கூறினார். மொத்தத்தில் தோல்வியின் பிடியில் சிக்கியுள்ள இந்தியா 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தொடரை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Advertisement