சி.எஸ்.கே அணியிலும், ஆர்.சி.பி அணியிலும் எனக்கு பிடித்த வீரர் என்றால் இவர்கள்தான் – மிச்செல் மெக்ளனகன் ஓபன் டாக்

Mcclenaghan-1
- Advertisement -

நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிச்செல் மெக்ளனகன் சமீபத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தற்போது கலந்துகொண்டு விளையாடினார். இந்நிலையில் இந்த தொடரின் பாதியில் கொரோனா வைரஸ் காரணமாக அவர் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளுக்கிணங்க நாடு திரும்பினார்.

Mcclenaghan

- Advertisement -

மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரிலும் விளையாட இருந்த அவர் தற்போது ஐ.பி.எல் தொடரில் கலந்து கொள்வதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நியூஸிலாந்து திரும்பியவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டர் மூலமாக பதிலளித்து வருகிறார்.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த சில வருடங்களாக விளையாடி வரும் அவர் தற்போது இந்திய ரசிகர்களின் கேள்விக்கு தனது பதிலை அளித்திருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்க கேள்விகளாக ரசிகர் ஒருவர் உங்களுக்கு மிகவும் பிடித்த சிஎஸ்கே வீரர் யார் என்று கேட்ட கேள்விக்கு அவர் ஹர்பஜன்சிங் தான் என்று பதிலளித்துள்ளார்.

மேலும் ஆர்சிபி அணியில் உங்களுக்கு பிடித்த வீரர் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சைமன் காடிச் என்று பதில் அளித்துள்ளார். சைமன் காடிச் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆவார். அவர் தற்போது பெங்களூர் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆர்.சி.பி அணியில் வீரர்கள் யாரையும் கூட குறிப்பிடாமல் பயிற்சியாளரை பிடிக்கும் என்று அவர் குறிப்பிட்டது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இந்த வருடமும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட இருந்த அவர் இந்த ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் சற்று ஏமாற்றம் அடைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் மக்கள் அனைவரும் பத்திரமாக இருக்கும் படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement