ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்கு இப்படி ஒரு நிலைமை வரும்னு நினைக்கல – மிட்சல் மார்ஷ் வருத்தம்

Marsh
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 15-வது ஐபிஎல் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. இந்த ஆண்டு அறிமுக அணியாக விளையாடிய குஜராத் அணி லீக் போட்டிகளில் இருந்து பிளே ஆப் சுற்று வரை தங்களது ஆதிக்கத்தை தொடர்ச்சியாக வெளிக்காட்டி இறுதியில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி இறுதியாக நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்று இருந்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.

Dc

- Advertisement -

ஆனால் அந்த போட்டியில் தோல்வியடைந்து டெல்லி அணி வெளியேறியதால் நான்காவது இடத்தை பிடித்து பெங்களூர் அணி பிளேஆப் சுற்றுக்கு சென்றிருந்த நிலையில் இந்த தொடரில் 14 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்து வெளியேறிய டெல்லி அணி குறித்து தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மிச்செல் மார்ஷ் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த ஆண்டு நான் டெல்லி அணிக்காக விளையாட தேர்வான போது காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்டேன். பின்னர் ஒரு சில போட்டிகளில் விளையாடியதும் கொரோனா காரணமாக சில போட்டிகளை தவறவிட்டேன். இப்படி இடையிடையே வாய்ப்பு கிடைத்தாலும் எனது அளிக்க முழு பங்களிப்புடன் நான் விளையாடி இருந்தேன்.

Mitchell Marsh

ஆனால் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேரேறாதது எனக்கு மிகப்பெரிய வருத்தம் தான். ஒருவேளை நாங்கள் நான்காவது இடத்தினைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருந்தால் நிச்சயம் சிறப்பாக விளையாடி இருக்க முடியும். அந்த வகையில் டெல்லி அணி இறுதிப்போட்டி வரை முன்னேறாதது எனக்கு மிகவும் மன வருத்தத்தை தந்தது என்று மிட்சல் மார்ஷ் கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது இடத்தில் இறங்கி பேட்டிங் செய்வதையே விரும்புகிறேன். ஏனெனில் பவர் பிளே ஓவர்களின்போது அதிரடியாக விளையாடினால் அந்த மொமன்டத்தை போட்டியில் இதுவரை நமது ஆட்டத்தை சிறப்பாக கொண்டு செல்ல முடியும் எனவே மூன்றாவது வரிசையில் விளையாடுவது எனக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.

இதையும் படிங்க : என்னோட கரியரே முடிஞ்சதுனு நெனச்சேன். ஆனா தோனி காப்பாத்திட்டாரு – ஹார்டிக் பாண்டியா நெகிழ்ச்சி

சர்வதேச கிரிக்கெட் மிகவும் கடினமானது என்றாலும் உலகில் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் என்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் எனவும் மிட்சல் மார்ஷ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement