ஆப்கானிஸ்தானிடம் தோற்க இதான் காரணம்.. அடுத்த போட்டியில் இந்தியாவை விட நல்ல டீம் சிக்காது.. மார்ஷ் பேட்டி

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் சரித்திரம் படைத்துள்ளது. ஜூன் 23ஆம் தேதி செயின்ட் வின்சென்ட் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் வெறும் 149 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஜாட்ரான் 51, ரஹ்மனுல்லா குர்பாஸ் 60 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஹாட்ரிக் உட்பட பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தானின் தரமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் திணறியது. அந்த வகையில் 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 127 ரன்களுக்கு சுருண்டு அவமான தோல்வியை பதிவு செய்தது.

- Advertisement -

ஒப்புகொண்ட மார்ஷ்:
அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக குல்பதின் நைப் விக்கெட்டுகள் சாய்த்தார். இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு வெற்றியை பெற்று ஆப்கானிஸ்தான் சரித்திரம் படைத்தது. அதன் காரணமாக தங்களுடைய கடைசிப் போட்டியில் வென்று ஆஸ்திரேலியா அதனுடைய கடைசிப் போட்டியில் தோற்றால் செமி ஃபைனல் செல்லலாம் என்ற நிலைக்கு ஆப்கானிஸ்தான் வந்துள்ளது.

மறுபுறம் செமி ஃபைனல் செல்ல இந்தியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியை சந்தித்ததை ஒப்புக் கொள்வதாக ஆஸ்திரேலிய மிட்சேல் மார்ஷ் கேப்டன் தெரிவித்துள்ளார். அதே சமயம் தங்களுடைய தரத்திற்கு அடுத்த போட்டியில் வென்று செமி ஃபைனல் செல்வதற்கு இந்தியாவை விட ஒரு நல்ல அணி கிடைக்காது என்றும் அவர் மறைமுகமாக எச்சரித்தார்.

- Advertisement -

குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல் போல நாளைய வாழ்வா – சாவா போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஆப்கானிஸ்தான் 20 ரன்கள் அதிகமாக எடுத்தனர். இந்த தொடரில் நிறைய அணிகள் முதலில் பந்து வீசினார்கள். எனவே டாஸ் முடிந்ததும் வெற்றி – தோல்வி நிர்ணயிக்கப்பட்டதாக நான் கருதவில்லை”

இதையும் படிங்க: அவருக்கு நன்றி.. ஒருவழியா உழைப்பால் ஆஸியை சாய்ச்சுட்டோம்.. எங்களோட சரித்திரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு.. நைப் பேட்டி

“இன்றைய இரவு எங்களுக்கு சரியாக அமையவில்லை. பிட்ச் விளையாடுவதற்கு எளிதாக இல்லை. ஆனால் 2 அணிகளும் அதில் விளையாடின. ஏற்கனவே சொன்னது போல இந்தப் போட்டியில் நாங்கள் போட்டியில் நாங்கள் தோற்கடிக்கப்படும். தற்போது நாங்கள் அடுத்த போட்டியில் வெல்ல வேண்டியுள்ளது. அதை செய்வதற்கு வேறு எந்த சிறந்த எதிரணியும் (இந்தியா) இருக்க முடியாது” என்று கூறினார்.

Advertisement