எதிர்வரும் ஐ.சி.சி-யின் எட்டாவது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற இருக்கிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கெதிராக விளையாட இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியிலிருந்து விலகிய வீரர் :
மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்க இருக்கும் இந்த தொடரில் இறுதிவரை சென்று வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் ஏற்கனவே வகுக்கப்பட்டு விட்டன. குரூப் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கும், அரை இறுதியில் வெற்றிபெறும் இறுதிப் போட்டிக்கும் தகுதிபெறும் என்று அட்டவணை ஏற்கனவே வெளியாகிவிட்டது.
இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரானது நெருங்கி வரும் வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இடம் பிடிக்கும் வீரர்களின் விவரத்தையும், வெளியேறும் வீரர்களையும் அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஸ் காயம் காரணமாக விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சமீப காலமாகவே முதுகு பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வரும் அவர் அந்த காயத்தில் இருந்து குணமடைய இன்னும் நாட்கள் ஆகும் என்பதனால் அவர் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகுகிறார் என்று அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : சுனில் கவாஸ்கருக்கு அடுத்து இந்தியாவின் சிறந்த ஓப்பனர் இவர்தான் – சவுரவ் கங்குலி கருத்து
அதேபோன்று இந்தியாவில் மார்ச் மாதம் துவங்கி நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டுள்ளது. அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.



