என்னால பயோ பபுள் வளையத்துலாம் இருக்க முடியாது. சன் ரைசர்ஸ் அணியிலிருந்து வெளியேறிய வீரர் – விவரம் இதோ

SRH
- Advertisement -

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்கவுள்ள ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்-ரவுண்டர் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் பயோ பப்புளில் தங்க விருப்பம் தெரிவிக்காத காரணத்தினால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து தன்னை வெளியே ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு மாற்று வீரராக இங்கிலாந்து அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இணைத்துள்ளதை உறுதி செய்துள்ளது.

marsh

- Advertisement -

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஆன மிட்செல் மார்ஷ் சென்ற ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இரண்டு கோடிக்கு வாங்க பட்டார். சென்ற ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக சில போட்டிகள் மட்டும் விளையாடிய மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு மாற்று வீரராக சென்ற ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி வீரரான ஜேசன் ஹோல்டரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ஆண்டு மிட்செல் மார்ஷ் நல்ல உடல் தகுதியுடன் இருந்தும், பயோ பப்புளில் தங்க விருப்பம் தெரிவித்த காரணத்தினால் ஐபிஎல் தொடரில் இருந்து சென்ற ஆண்டைப் போல வெளியேறி உள்ளார். கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதன் காரணமாக அனைத்து அணிகளும் பயோ பப்புளில் வீரர்களை தங்கவைத்து தொடர் முடியும் வரை மிகப் பாதுகாப்பாக வைத்திருக்கும். உள்ளே இருக்கும் வீரர்கள் தொடர் முடியும் வரை வெளியே எங்கும் செல்லக்கூடாது என்பது பிசிசிஐயின் வரைமுறை.

Marsh-2

இந்நிலையில் தொடர் முடியும் வரை உள்ளே இருக்க இயலாது என கூறிக்கொண்டு தன்னை ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றி கொண்டுள்ளார் ஆஸ்திரேலிய வீரரான மிட்செல் மார்ஷ். இந்நிலையில் அவருக்கு மாற்றாக இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜேசன் ராயை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கைப்பற்றியுள்ளது. ஜேசன் ராய் டெல்லி அணிக்காக முன்னதாக விளையாடி உள்ளார்.

வெறும் 8 ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள ஜேசன் ராய் 179 ரன்களை அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அவரது அவரேஜ் விகிதம் 29.83, மேலும் அவர் ஸ்ட்ரைக் ரேட் 133 58ஆகும். சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. அந்த இரு தொடரிலும் ஜேசன் ராய் அதிரடியாக ஆடியதன் மூலம், தற்பொழுது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் கைப்பற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement