- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதுவரை நான் மட்டுமே அவுட்டாகல.. உலகின் சிறந்த பும்ராவை அடிக்க இதான் வழி.. மிட்சேல் மார்ஷ் பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்துள்ளது. இதை அடுத்து இந்த தொடரின் மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரஸ்பேன் நகரில் துவங்க உள்ளது.

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற அந்தப் போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது. முன்னதாக இந்தத் தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறார். அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் கிட்டத்தட்ட அனைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் இத்தொடரில் குறைந்தது அவரிடம் ஒருமுறை அவுட்டாகியுள்ளார்கள்.

- Advertisement -

அவுட்டாகாத மார்ஷ்:

ஆனால் மிட்சேல் மார்ஷ் மட்டுமே அவரிடம் இதுவரை அவுட்டாகாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் உலகின் சிறந்த ஜஸ்ப்ரித் பும்ராவை எப்படியாவது சமாளித்து விடலாம் என்று மெதுவாக விளையாடினால் அவுட்டாக வாய்ப்புள்ளதாக மார்ஷ் தெரிவித்துள்ளார். எனவே தைரியமாக நின்று அட்டாக் செய்யும் பேட்டிங்கை வெளிப்படுத்துவதே பும்ராவை எதிர்கொள்ள சிறந்த வழி என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உலகின் சிறந்த பவுலருக்கு எதிராக நீங்கள் விளையாடும் போது அவுட்டாகி விடுவோம் என்ற எண்ணத்தில் அவரை சமாளித்து நகர முயற்சிப்பீர்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரை அங்கே உங்களுக்கு நீங்களே அழுத்தத்தை கொடுத்து சொந்த வழியில் அவருக்கு எதிராக சவாலை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

பும்ராவை அடிக்க:

“தற்சமயத்தில் அவர் உலகின் மிகச்சிறந்த பவுலராக இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். எனவே இவை அனைத்தும் அவருடைய சவாலுக்கு எதிராக நீங்கள் நிற்பது பற்றியதாகும். இது பெரிய தொடர். அத்தொடரில் உலகின் சிறந்த பவுலரான அவரை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய மனநிலை. அதனால் அவரை மீண்டும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்”

இதையும் படிங்க: மைதானத்தின் இயல்பை மாற்ற விரும்பவில்லை.. 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான மைதானம் – இப்படித்தான் இருக்கும்

“என்னையும் அவுட்டாக்க அவர் வருவார். ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த திட்டங்களை வைத்திருப்பார்கள். சூழ்நிலைக்கு தகுந்தார் போல் எனது வழியில் நான் பேட்டிங் செய்ய முயற்சிப்பேன். சில நேரங்களில் நீங்கள் நிதானமாகவும் சில நேரங்களில் அட்டாக் செய்யும் ஆட்டத்தையும் வெளிப்படுத்த வேண்டும். உலகின் சிறந்த இந்திய அணியின் பவுலிங் அட்டாக்கை எதிர்கொள்ள எங்களுடைய பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த வழியில் முயற்சி செய்வார்கள்” என்று கூறினார்.

- Advertisement -