இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றனர்.
பிரிஸ்பேன் பிட்ச் இப்படித்தான் இருக்கும் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது காபா மைதானத்தில் டிசம்பர் 14-ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப இந்திய அணி முழு விச்சுடன் தயாராகி வருகிறது.
இதன் காரணமாக இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பிரிஸ்பேன் ஆடுகளத்தை தயாரித்த பிட்ச் பராமரிப்பாளர் ஆடுகளம் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
பிரிஸ்பேன் ஆடுகளத்தில் இயல்பாகவே நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும். எனவே அந்த பாரம்பரிய தன்மையை மாற்றாமல் அப்படியே இந்த முறையும் பிட்சை அமைக்க இருக்கிறோம். அதன் காரணமாக இந்த மைதானத்தில் நல்ல வேகமும், பவுன்சும் இருக்கும் என்பது நிச்சயம்.
பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இருவருமே போட்டியில் இருக்க வேண்டும். எனவே இருதரப்புக்கும் ஒத்துழைக்கும் வகையில் நாங்கள் பிட்சினை அமைக்க உள்ளோம். கடந்த இரண்டு நாட்களாக இங்கு மழை பெய்துள்ளது. ஆனாலும் போட்டிக்கு இன்னும் சில நாட்கள் எஞ்சியுள்ளதால் ஆடுகளத்தை சிறப்பான முறையில் தயார் செய்வோம் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சுமாரான பவுலருக்கு கூட கோலியின் வீக்னெஸ் தெரியுது.. இந்தியாவால் ஹெட்டை சாய்க்க முடியாதா? கைப் அட்வைஸ்
கடந்த முறை இந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதல் முறையாக இந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்ததோடு அந்த தொடரையும் கைப்பற்றியிருந்தது. அதனால் அந்த நல்ல நினைவுகளோடு இந்திய அணி இந்த மைதானத்தில் அடுத்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.



