வரும் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் பிரபல அதிரடி வீரர் – யார் தெரியுமா ?

virat
- Advertisement -

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார்.ஆஸ்திரேலியாவின் முன்னனி பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றார்.
starc

நேற்றுமுதல் நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் போது மிட்செல் ஸ்டார்கிற்கு காலில் காயம் ஏற்பட்டது.இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல்-இல் மிட்செல் ஸ்டார்கினால் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக வேறு வேறு காரணங்களினால் கடைசி நேரத்தில் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போன மிட்செல் ஸ்டார்கினால் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக கடைசி நேரத்தில் விளையாடமுடியாமல் போயியுள்ளது.மிட்செல் ஸ்டார்க் தற்போது கொல்கத்தா அணியிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Advertisement