முட்டாள் தனமான முடிவின் மூலம் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்த மிட்சல் மார்ஷ் – விவரம் இதோ

Marsh-2
- Advertisement -

பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்நிலையில் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது.

Marsh

- Advertisement -

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் அந்த அணியின் இளம் நட்சத்திர ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டிகளில் நடைபெற்ற போது மிட்சல் மார்ஷ் செய்த முட்டாள் தனமான காரணம் தான்.

உள்ளூர் போட்டியில் அவுட்டான விரக்தியில் அதனை ஏற்றுக்கொள்ளாத அவர் மனம் வருந்தி ஓய்வு அறைக்கு செல்லும்போது தனது கையால் அந்த அறையின் சுவரில் ஓங்கி குத்திக்கொண்டார். இதனால் அவரது நடுவிரல் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக நான்கு முதல் ஆறு வாரங்கள் அவர் சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Marsh 1

இதனால் பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் மிட்சல் மார்ஷ் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் கூறியபோது : கையை சுவரில் குத்திக்கொண்ட பிறகு என்னிடம் வந்து நான் முட்டாள்தனமான முடிவு செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று மிட்சல் மார்ஷ் கூறியதாக அவர் தெரிவித்தார்.

Advertisement