கிரிக்கெட் போட்டிகள் தற்போது துவங்க வேண்டும் அப்போதான் இந்தநிலைமை மாறும் – பாக் பயிற்சியாளர் பேட்டி

Misbah-ul-Haq
- Advertisement -

கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் கால்பந்து கூடைப்பந்து போன்ற அதிகமாக மக்கள் கூடும் விளையாட்டுப்போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எப்போதும் பொழுதுபோக்குடன் நாட்களை கழிக்கும் மக்களிடமும் தற்போது ஒரு மனச்சோர்வு உண்டாகியுள்ளது.

MI

- Advertisement -

வீட்டிற்குள்ளேயே அனைவரும் முடங்கியுள்ளனர். அவர்களது மன சோர்வை போக்க உலக அரசாங்கங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மக்களின் மன சோர்வை போக்க மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : கிரிக்கெட் போட்டிகளை தற்போது துவங்கலாம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டிகளை துவங்குவது ஆரோக்கியமானதாக இருக்காது. இருந்தாலும் வெறிச்சோடிய மைதானங்களில் தகுந்த பாதுகாப்புடன் போட்டிகளை நடத்தலாம்.
இப்படி நடத்தினால் யாருக்கும் பிரச்சனை இல்லை.

Misbah

மக்களும் வீட்டிற்குள்ளேயே சோர்வுடன் முடங்கிக் கிடக்கிறார்கள். வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு போட்டிகளை அவர்களால் ரசிக்க முடியும். அப்போது பிரச்சனைகள் உருவாகது. இது மக்களுக்கு புத்துணர்வை அளிக்கும். மீண்டும் அவர்கள் இயல்பு வாழ்க்கையில் செயல்பட ஏதுவாக இருக்கும் என்று கூறியுள்ளார் மிஸ்பா உல் ஹக்.

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரான இவரின் கிரிக்கெட் குறித்த அனுபவம் அவர்களின் அணியின் மேம்பாட்டுக்கு உதவும் என்பதால் அவரை அணியின் பயிற்சியாளராக அந்நாட்டு நிர்வாகம் நியமித்தது. இருப்பினும் தற்போது வரை பாகிஸ்தான் அணியில் சூதாட்ட பிரச்சனை, வீரர்கள் மோதல் போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement