இனிமே பிரியாணி சாப்பிட்டீங்க இதுதான் நடக்கும். வித்தியாசமான முறையில் பாக் வீரர்களை எச்சரித்த – மிஸ்பா உல் ஹக்

Misbah-ul-Haq
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் புதிய பயிற்சியாளராக நியமனமானது முதல் உணவுக் கட்டுப்பாடுகள் குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

Misbah

- Advertisement -

அதன்படி தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் அனைவரும் மதிய வேளைகளில் பிரியாணி மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட எந்த ஒரு பிரியாணி வகை உணவையும் சாப்பிடக்கூடாது. பார்பிக்யூ உணவு வகைகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இதனை சர்வதேச பாகிஸ்தான் அணிக்கும் கொண்டுசெல்லும் திட்டமும் அவர் வைத்துள்ளார். மேலும் பாகிஸ்தான் வீரர்கள் இனிமேல் இந்த உணவு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அவர்கள் எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அல்லது பிரியாணி மற்றும் ஜங்க் ஃபுட்ஸ் என்று சொல்லக்கூடிய உடல் எடையை அதிகரிக்க கூடிய நொறுக்கு தீனிகள் எதையும் உண்ணக்கூடாது.

amir

உடற்தகுதியில் வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த புதிய உணவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். அதற்காக தனியாக வீரர்கள் சாப்பிடும் உணவு முறை குறித்த அட்டவணையையும் அவர் தயார் செய்து வைத்துள்ளார். பயிற்சியாளர் விதிமுறையை மீறும் வீரர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement