இந்தியாவை ஈஸியா வீழ்த்திருப்போம்.. இதனால மிஸ் ஆகிடுச்சு.. 2007 டி20 உ.கோ தோல்வி பற்றி மிஸ்பா வருத்தம்

Misbah-ul-haq
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமைந்தது. அதே போல தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்ததையும் மறக்கவே முடியாது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கௌதம் கம்பீர் 75, ரோஹித் சர்மா 30 ரன்கள் எடுத்த உதவியுடன் 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய பாகிஸ்தான் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து ஒரு கட்டத்தில் 77/6 என தடுமாறியது. ஆனால் அப்போது சவாலாக பேட்டிங் செய்த மிஸ்பா-உல்-ஹக் 43 (38) ரன்கள் அடித்து கிட்டத்தட்ட இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தார். இருப்பினும் கடைசியில் 4 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது தேவையின்றி ஸ்கூப் ஷாட் அடித்த அவர் கேட்ச் கொடுத்தார்.

- Advertisement -

மிஸ்பா வருத்தம்:
அதனால் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா தோனி தலைமையில் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் அப்போட்டியில் தம்முடைய அதீத நம்பிக்கை காரணமாக இந்தியாவிடம் தோல்வியை சந்தித்ததாக மிஸ்பா-உல்-ஹக் வருத்தம் தெரிவித்துள்ளார். அது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“அப்போட்டியில் வெல்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஏனெனில் பிட்ச் நன்றாக இருந்த நிலையில் பவுண்டரி அளவு சிறியதாக இருந்தது. மறுபுறம் இந்தியாவுக்கு வெற்றி கடினமாக இருந்தது. ஏனெனில் அவர்கள் சுழல் பந்து வீச்சை சார்ந்திருந்தனர். அப்போட்டி நடைபெற்ற வாண்ட்ரஸ் மைதானம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு கடினமாகும். அந்த சமயத்தில் ஹர்பஜன் சிங் இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராக இருந்தார்”

- Advertisement -

“ஆனால் அங்குள்ள சிறிய பவுண்டரியின் காரணமாக ஆஃப் ஸ்பின்னர் நன்றாக வீசுவது மிகவும் கடினம். எனவே சேசிங் கடினமாக இருக்காது என்று நாங்கள் நினைத்தோம். அதற்கு நல்ல துவக்கம் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததும் இம்ரான் நசீர் ரன் அவுட்டானதும் எங்களை அழுத்தத்திற்குள் தள்ளியது. ஒரு கட்டத்தில் 77/6 என நாங்கள் தடுமாறியதால் இலக்கு கடினமானது”

இதையும் படிங்க: முன்னாடி எங்களை திட்டியவர்கள் எல்லாம் இப்போ அவங்களே கூப்பிட்டு விருந்து வைக்குறாங்க – நிதீஷ் ரெட்டி சுவாரசியம்

“இருப்பினும் கடைசியில் ஓவர் கான்ஃபிடன்ஸ் காரணமாக அனைத்தும் மோசமானது என்று நினைக்கிறேன். குறிப்பாக 13 ரன்கள் தேவைப்பட்ட போது நான் 2 பந்தை மட்டுமே நன்றாக அடிக்க வேண்டியிருந்தது. அப்போது ஆஃசிப் பேட்டில் எட்ஜ் பட்டு பவுண்டரி போனதால் அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இருப்பதாக நினைத்தோம். அத்துடன் நானும் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்தேன். இருப்பினும் அது தான் கிரிக்கெட். உங்களிடம் 1 விக்கெட் மட்டுமே இருக்கும் போது எதிரணி முன்னணியில் இருப்பார்கள். ஏனெனில் நீங்கள் ஒரு தவறு செய்தாலும் போட்டி முடிந்து விடும்” என்று கூறினார்.

Advertisement