டி20 உ.கோ அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் பதவியை ராஜினாமா செய்த – பாக் பயிற்சியாளர்

Misbah-1
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக முதன்மை பயிற்சியாளராக மிஸ்பாவும், பந்துவீச்சு பயிற்சியாளராக வக்கார் யூனிசும் நியமிக்கப்பட்டார்கள்.

waqar

- Advertisement -

அடுத்த ஆண்டு வரை அவர்களுக்கு பயிற்சியாளராக பணியாற்ற அனுமதி இருப்பினும் அவர்கள் முன்கூட்டியே தங்களது பதவியை ராஜினாமா செய்தது தற்போது அதிக அளவில் பரபரப்பாக பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான சொந்த நாட்டில் மிகப்பெரிய தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்த தொடரானது விரைவில் நடைபெற இருக்கும் வேளையில் இவர்கள் இருவரும் விலகி உள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. மேலும் டி20 உலக கோப்பை தொடரிலும் மிஸ்பா மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் இணைந்து பணியாற்றி பாகிஸ்தான் அணியை முன்னேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர்கள் இருவரும் ராஜினாமா செய்தது தற்போது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

waqar 1

இந்நிலையில் பதவியில் இருந்து விலகியதற்கு காரணமாக மிஸ்பா உல் ஹக் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவதன் காரணமாக இந்த ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அந்த அணியில் நீடிக்கும் குழப்பம் என்ன ? எதனால் அவர்கள் ராஜினாமா செய்தார்கள் ? என்ற இந்த விடயங்கள் மர்மமாகவே உள்ளன.

misbah

இந்நிலையில் தற்போது தற்காலிக பயிற்சியாளராக சக்லைன் முஷ்டாக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக அப்துல் ரசாக் ஆகியோரை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement