ரோஹித், கோலியை குறைச்சு பேசாதீங்க.. ஆனா ஜெயிக்க போறது அவங்க தான்.. மைக் ஹசி பதிலடி

Mike Hussey
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா அதனுடைய சொந்த மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விரைவில் துவங்க உள்ளது. கடந்த வாரம் தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா ஒய்ட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல அந்த தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டு வருகிறார். அதனால் கடந்த 5 வருடங்களில் விராட் கோலி 3 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கூறியிருந்தார். அதனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

கோலி, ரோஹித்துக்கு ஆதரவு:

அது பற்றி இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு இந்திய அணியை பற்றி பேசுவதற்கு ரிக்கி பாண்டிங் யார்? என்ற வகையில் கம்பீர் அதிரடியான பதிலை கொடுத்தார். மேலும் ஆஸ்திரேலிய அணியை பற்றி சிந்தியுங்கள் என்றும் கம்பீர் கூறியிருந்தார். அத்துடன் ஆஸ்திரேலியாவில் ரோஹித் சர்மா, விராட் கோலி நன்றாக விளையாடுவார்கள் என்றும் கம்பீர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கம்பீர் சொல்வது போல விராட் கோலி, ரோஹித் சர்மா கண்டிப்பாக அசத்துவார்கள் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார். ஆனால் முதல் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக துவக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் போட்டியிலேயே மனதளவிலும் திறன் அளவிலும் அவர்கள் எந்தளவுக்கு இருக்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்க முடியும்”

- Advertisement -

ஹசி ஆதரவு:

“சமீபத்தில் இந்தியா சந்தித்த தோல்வியால் அவர்கள் வேதனையை சந்தித்திருப்பார்கள். அவர்கள் நிறைய ரசிகர்களை சேர்க்கக்கூடிய தரம் கொண்டவர்கள். அவர்கள் ரன்கள் அடிக்கவில்லை என்று கம்பீர் சொல்லி நாம் கேட்டோம். அவர்களைப் போன்ற சாம்பியன் வீரர்களை முடிந்தவர்களாக எழுதுவது வேடிக்கையான விஷயமாகும்”

இதையும் படிங்க: இந்திய அணியை பந்தாடிய தென்னாப்பிரிக்க வீரர்.. ஐ.பி.எல் மெகா ஏலத்தில் – பெரிய தொகைக்கு செல்ல வாய்ப்பு

“கடந்த காலங்களிலும் விமர்சனங்களை தாண்டி அவர்கள் சிறப்பாக விளையாடி உள்ளார்கள். எனவே அவர்கள் ஆஸ்திரேலியாவில் நன்றாக செயல்படுவார்கள் என்று நான் ஆதரிக்கிறேன். அவர்கள் இந்தியாவுக்காக விளையாடக்கூடிய பெருமை மிகுந்த வீரர்கள். ஆனால் இப்போதும் ஆஸ்திரேலியா தான் தொடரை வெல்லும் அணியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.

Advertisement