இதைவிட சிறந்த அணியை தேர்வு செய்யவே முடியாது – மைக் ஹஸ்ஸி தேர்வு செய்த பெஸ்ட் ஐ.பி.எல் லெவன் அணி இதோ

Hussey
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான துவக்க வீரராக இருந்த மைக் ஹஸி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக இருக்கிறார். ஐபிஎல் தொடர் இந்த வருடம் நடக்காததால் இவரும் மற்ற வீரர்களை போல இவரும் ஊரடங்கில் வீட்டில் தான் இருக்கிறார்.
இந்நிலையில் ஆக்ரோஷமான ஒரு ஐபிஎல் அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

வழக்கம்போல சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் துவக்க வீரர்களாக இருக்கின்றனர். அதன்பிறகு பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலியும், 4 ஆவது இடத்தில் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான 360 டிகிரி டி வில்லியர்சும் இருக்கின்றனர்.

கேப்டனாக தனது கேப்டன் தோனியையே தேர்வு செய்துள்ளார். இவரே விக்கெட் கீப்பர் ஆகவும் செயல்படுகிறார். ஆல் ரவுண்டர்களாக இரண்டு வீரர்களை தேர்வு செய்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியா மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆன்ட்ரு ரஸல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2 சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ரஷீத் கான் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சாஹ்ல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். 12வது வீரராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் இடம் பெற்றுள்ளார்.

- Advertisement -

Rahul

மைக் ஹஸ்ஸி தேர்வு செய்த அணி இதோ :

ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, டிவில்லியர்ஸ், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆண்ட்ரே ரசல், ரஷீத் கான், சாஹல், புவனேஷ்வர் குமார், பும்ரா. 12வது வீரர் – கேஎல் ராகுல்

Advertisement