- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவர் செஞ்சது தப்பு தான்.. அதுக்காக சேஸிங்கை மறந்துட்டு இப்படியா செய்விங்க.. ரோஹித்தை விளாசிய ஹசி

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நான்காவது நாள் முடிவில் 228-9 ரன்கள் எடுத்துள்ளது. டிசம்பர் 26 முதல் நடைபெறும் அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 474 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.

பின்னர் விளையாடிய இந்தியா மிகவும் போராடி 369 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 140, ஜெய்ஸ்வால் 82, வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக லயன், கேப்டன் கமின்ஸ், போலண்ட் 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடும் ஆஸ்திரேலியாவுக்கு லபுஸ்ஷேன் 70, கமின்ஸ் 41 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

கோபமான ரோஹித்:

களத்தில் லயன் 41*, போலண்ட் 10* ரன்களுடன் உள்ளார்கள். தற்போது ஆஸ்திரேலியா 333 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் இப்போட்டியில் கடைசி நாளில் இந்தியா பெரிய இலக்கை துரத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முன்னதாக இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே அபாரமாக பந்து வீசிய இந்தியா 99-6 என ஆஸ்திரேலியாவை மடக்கி பிடித்தது.

அப்போது லபுஸ்ஷேன் கொடுத்த கேட்ச்சை ஜெய்ஸ்வால் தவற விட்டார். அதற்கு முன்பாகவே உஸ்மான் கவாஜா கொடுத்த கேட்சையும் ஜெயஸ்வால் கோட்டை விட்டிருந்தார். அதன் காரணமாக கோபமடைந்த ரோகித் சர்மா அருகில் நின்ற ஜெய்ஸ்வாலை திட்டும் வகையில் பேசினார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் ஜெய்ஸ்வால் மற்றுமொரு கேட்சை விட்டார்.

- Advertisement -

கேப்டன் ஆதரவு எங்கே:

இந்நிலையில் 22 வயதாகும் இளம் வீரரான ஜெய்ஸ்வாலிடம் கேப்டனாக ரோகித் சர்மா அவ்வாறு நடந்திருக்கக்கூடாது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹசி விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொன்னால் கேப்டனிடம் இருந்து இது சரியான பாடி லாங்குவேஜ் கிடையாது. கண்டிப்பாக விக்கெட் வேண்டும் என்பதால் ரோஹித் இவ்வாறு உணர்ச்சியை காட்டுவதை நான் பாராட்டுகிறேன்”

இதையும் படிங்க: பும்ரா செய்த சிறிய தவறு.. 1928ஆம் ஆண்டை தாண்டிய சவால்.. எம்சிஜியில் இந்தியா சரித்திரம் படைக்குமா?

“ஆனால் கேப்டனாக நீங்கள் உங்கள் வீரருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இங்கே யாருமே கேட்சை தவற விடாமல் இருக்க முடியாது. அது இளம் வீரரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார். அதே வர்ணனையில் அலிசா ஹீலி பேசியது பின்வருமாறு. “இந்த இளம் வீரர் அடுத்ததாக உங்களுடன் உங்களது நாட்டுக்காக ரன்கள் அடித்து வெற்றியை பெறுவதற்காக துவக்க வீரராக களம் இறங்கப் போகிறவர். அப்படிப்பட்டவரிடம் நீங்கள் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது” என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -