மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா முதல் நான்காவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. டிசம்பர் 26 முதல் நடைபெற்ற வரும் அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 474 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
பின்னர் விளையாடிய இந்தியா மிகவும் போராடி 369 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 114, ஜெய்ஸ்வால் 82, வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கமின்ஸ், லயன், போலண்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக விளையாடும் ஆஸ்திரேலியா நான்காவது நாள் முடிவில் 228-9 ரன்கள் எடுத்துள்ளது.
பும்ராவின் சின்ன தவறு:
அதிகபட்சமாக லபுஸ்ஷேன் 70, கேப்டன் கமின்ஸ் 41 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் லயன் 41*, போலண்ட் 10* ரன்கள் எடுத்துள்ளனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக பும்ரா 4* விக்கெட்டுகளை எடுத்துள்ள நிலையில் ஆஸ்திரிலியா மொத்தம் 333 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. முன்னதாக இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சிராஜ், பும்ரா ஆகியோர் அதிரடியாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை மடக்கி பிடித்தார்கள்.
அதனால் 99-6 என தடுமாறிய ஆஸ்திரேலியாவை விரைவில் இந்தியா சுருட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது கமின்ஸ், லபுஸ்ஷேன், லயன் நங்கூரமாக விளையாடி இந்தியாவுக்கு சவாலை கொடுத்தனர். அப்போது ஐந்தாவது நாளின் கடைசி ஓவரின் 4வது பந்தில் லையனை 35* ரன்களில் பும்ரா அவுட்டாக்கினார். அதனால் 222 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை சுருட்டிய இந்தியா 328 ரன்களை இலக்காகப் பெற்றது.
1928 தாண்டிய இலக்கு:
ஆனால் அந்த பந்தை பும்ரா நோ-பாலாக வீசி தவறு செய்தார். அதைப் பயன்படுத்திய லயன் மேற்கொண்டு 6 ரன்கள் அடித்ததால் ஆஸ்திரேலியா இப்போதே 333 ரன்கள் முன்னிலை பெற்று 334 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இங்கே விஷயம் என்னவெனில் மெல்போர்ன் மைதானத்தில் 1928ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 332 ரன்கள் அடித்து வென்றதே வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்காகும்.
இதையும் படிங்க: நான் செலக்டரா இருந்தா ரோஹித்தை மாத்திட்டு இவரை இந்திய கேப்டனா போடுவேன் – மார்க் வாக் காட்டம்
தற்போது ஆஸ்திரேலியா அந்த இலக்கை தாண்டியுள்ளது. அதன் காரணமாக தற்போது மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா வெற்றி பெற வரலாறு காணாத இலக்கை துரத்த வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. 5வது நாளில் பேட்டிங் செய்வதற்கு பிட்ச் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதில் ஆஸ்திரேலியாவை சமாளித்து வரலாறு காணாத இலக்கை துரத்தி இந்தியா சரித்திர வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.



