- Advertisement -
ஐ.பி.எல்

ரசித் கானிடம் அவுட்டானதால் கோபப்பட்ட தோனியால்.. கோச்சிங் கேரியர் முடிஞ்சுன்னு நினைச்சேன்.. ஹசி பேட்டி

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்குகிறது. அந்த தொடரில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்எஸ் தோனி விளையாட உள்ளது ரசிகர்களிடம் வழக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள தோனி எப்போதும் தன்னுடைய வழியில் வித்தியாசமாக செயல்படக்கூடியவர்.

அந்த வகையில் 2018 ஐபிஎல் தொடரில் ஹைதெராபாத் அணியை குவாலிபயர் ஒன்று மற்றும் ஃபைனலில் தோற்கடித்து சென்னை அணி வெற்றி பெற்றது. அந்த தொடரில் ஹைதராபாத்துக்காக விளையாடிய ரசித் கானை தனது வழியில் தோனி எதிர்கொண்ட தோனி போல்ட்டானதாக ஹசி கூறியுள்ளார். இது பற்றி ஹசி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சொந்த தோனி வழி:

“பயிற்சியாளராக இருப்பதை நான் விரும்புகிறேன். உண்மையில் அது சில சிறப்பான வீரர்களுக்கு எந்த பயிற்சியும் கொடுக்காமல் இருப்பதைப் போன்ற ஒரு வேலையாகும். எடுத்துக்காட்டாக என் மனதில் வரலாற்றின் மகத்தான ஃபினிஷராக இருக்கும் எம்எஸ் தோனியுடன் வேலை செய்வதை எடுத்துக் கொள்ளலாம். அவருடன் வேலை செய்வது என்னையே கிள்ளுவது போன்ற உணர்வைக் கொடுக்கும்”

“ஹைதராபாத்துக்கு எதிரான பெரிய போட்டிக்கு முன் ரசித் கானை எதிர்கொள்வது பற்றிய தகவல்களை எங்கள் அனலைஸ்ட் எனக்கு அனுப்பினார். அதைப் பார்த்த நான் போட்டிக்கு முந்தைய நாள் இரவு அதை நீங்கள் பேட்ஸ்மேன்களுக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று சென்றேன். ஏனெனில் போட்டிக்கு ஒருநாள் முன்பாக நீங்கள் உங்களுடைய பேட்ஸ்மேன்களின் தலையில் அதிகமான விஷயங்களை போட விரும்ப மாட்டீர்கள்”

- Advertisement -

கோச்சிங் விடலாம் போல:

“அந்த அடுத்த நாள் நடைபெற்ற போட்டியில் ஆரம்பத்திலேயே நாங்கள் 4 விக்கெட்டுகளை இழந்தோம். அப்போது தோனி – டு பிளேஸிஸ் களத்தில் விளையாடினார்கள். அவர்களுக்கு எதிராக ரசித் கான் பௌலிங் செய்தார். அவரை ஆரம்பத்திலேயே கவர் டிரைவ் வாயிலாக அடிக்க முயற்சித்த தோனி போல்டானார். அவர் மெகா ஸ்டார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க: என்னோட ஹீரோ விராட் கோலி இதை கொடுத்ததற்கு நன்றி.. என்ன ஒரு பணிவு.. பாகிஸ்தான் வீரர் பாராட்டு

“அப்படிப்பட்ட அவர் அவுட்டாகி வந்ததும் என்னிடம் நான் என்னுடைய சொந்த வழியில் பேட்டிங் செய்வேன் என்பது போல கண்கள் அசைவிலேயே தெரிவித்தார். அதனால் என்னுடைய கோச்சிங் கேரியர் முடிந்ததாக நினைத்த நான் எஞ்சிய போட்டியில் அமைதியாக அமர்ந்தேன். தோனி மிகவும் சிறந்த வீரர். அந்தப் போட்டி முடிந்தபின் என்னிடம் வந்த அவர் நீங்கள் கொடுத்த தகவல் நன்றாக இருந்தாலும் அதில் அசத்துவதற்கு சில நாட்கள் பயிற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னார்” எனக் கூறினார்.

- Advertisement -