தோனியா..? பாண்டிங்கா..? இதில் யார் பெஸ்ட்..! சென்னை பயிற்சியாளர் மைக் ஹஸி நெற்றியடி பதில்..!

ricky
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியிலும், இந்திய கிரிக்கெட் அணியிலும் பல்வேறு கேப்டன்கள் வந்து சென்றாலும் , இந்த இரு அணிகளிலும் ரிக்கி பான்டிங் மற்றும் தோனிக்கு வரலாற்றில் நிச்சயம் ஒரு இடமுண்டு என்று கூறும் அளவிற்கு இவர்கள் இருவரும் தகுதி பெற்றவர்கள். இந்நிலையில் இந்த இரு வீரர்களில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி பதிலளித்துள்ளார்.
ponting-captaincy

பாண்டிங் மற்றும் தோனி இருவருமே,அவரவர் பாணியில் தனித்துவமாக விளங்கினார்கள். ரிக்கி பாண்டிங், சச்சின் காலகத்தில் இருந்து விளையாடி வருகிறார். இவர் ஆஸ்திரேலிய அணியை பொறுப்பேற்றதிலிருந்து அந்த அணியை நம்பர் 1 அணியாக நிலைத்து நிற்க வைத்தார்.இதுவரை அந்த அணிக்காக உலக கோப்பை மற்றும் டி20 கோப்பைகளை பெற்றுத்தந்துள்ளார். அதே போல தோனியை எடுத்துக் கொண்டால் இன்றுவரை மூன்றுவிதமான சாம்பியன்ஷிப்பையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை தோனியை மட்டுமே சாரும்.

- Advertisement -

2003 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சர்வதேச கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தியது. 2007ம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக தோனி ஆனதற்கு பிறகு இந்திய அணிக்கு ஒரு சிறந்த கேப்டன் கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கை அனைத்து ரசிகர்கள் மனதிலும் வந்தது. 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணியிடம் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி காலிறுதியில் தோற்று வெளியேறியது.

இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான மைக் ஹசி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், பாண்டிங் மற்றும் தோனி இவர்களில் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்வியை கேட்டுள்ளார். இதற்கு முதலில் பதிலளித்த ஹசி ‘இருவருமே சிறந்த கேப்டன்கள் தான் ‘ என்று கூறியுள்ளார். ஆனால், ஹர்பஜன் யாராவது ஒருவர் பெயரை தான் கூற வேண்டும் என கூறினார். இதற்கு பதிலளித்த ஹசி ‘ நான் இந்தியராக இருந்தால் கண்டிப்பாக தோனியின் பெயரை தான் சொல்வேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement