- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலியின் ஃபைனல் 76 இல்ல.. அவர் தான் 2024 டி20 உ.கோ சிறந்த இன்னிங்ஸ் ஆடுனாரு.. மைக் ஹெசன்

ஐசிசி 2024 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமைந்தது. ஜுன் மாதம் நடைபெற்ற அத்தொடரில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா தோல்வியே சந்திக்காமல் ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தோல்விகளையும் உடைத்தது.

முன்னதாக அந்தத் தொடரில் வழக்கத்திற்கு மாறாக துவக்க வீரராக விளையாடிய விராட் கோலி செமி ஃபைனல் வரை அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறினார். ஆனால் மாபெரும் இறுதிப்போட்டியில் 34/3 என தடுமாறிய போது நங்கூரமாக விளையாடிய அவர் 76 (59) ரன்கள் குவித்து இந்தியாவை தாங்கிப் பிடித்தார். இறுதியில் 177 ரன்களை கட்டுப்படுத்திய இந்தியாவுக்கு பவுலர்கள் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

சிறந்த இன்னிங்ஸ்:
அந்த வகையில் முக்கியமான ஃபைனலில் தன்னுடைய அனுபவத்தையும் கிளாஸையும் காண்பித்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். இந்நிலையில் ஃபைனலில் விராட் கோலி விளையாடிய ஆட்டத்தை விட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் சர்மா 92 ரன்கள் அடித்ததே 2024 டி20 உலகக் கோப்பையின் சிறந்த இன்னிங்ஸ் என முன்னாள் ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் பாராட்டியுள்ளார்.

இது பற்றி நியூசிலாந்து ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் சர்மா அடித்த 92 ரன்களே மிகவும் சிறந்த இன்னிங்ஸ் ஆகும்” என்று கூறினார். அவர் கூறுவது போல செயின்ட் லூசியா நகரில் நடைபெற்ற அப்போட்டியில் விராட் கோலி டக் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

குறிப்பாக மிட்சேல் ஸ்டார்க்கிற்கு எதிராக ஒரே ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 29 ரன்கள் விளாசினார். அதன் வாயிலாக மிட்சேல் ஸ்டார்க்கிற்கு எதிராக ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையும் ரோஹித் படைத்தார். தொடர்ந்து அனைத்து ஆஸ்திரேலிய பவுலர்களையும் புரட்டி எடுத்த அவர் 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் 92 (41) ரன்கள் விளாசி அவுட்டானார்.

இதையும் படிங்க: 20 வருஷம்.. வயசு காரணமில்லை.. தோனியின் முழங்கால் வலிக்கு இது தான் காரணம்.. அஸ்வின் உருக்கம்

அந்த வகையில் தனது சொந்த சாதனையைப் பற்றி கவலைப்படாமல் அடித்து நொறுக்கிய ரோஹித் சர்மாவின் உதவியால் இந்தியா 206 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் டிராவிஸ் ஹெட் 76 (43) ரன்கள் விளாசி இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். அதையும் தாண்டி ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -