65வதாக வந்தா என்ன பண்றது.. ஆர்சிபி அணியில் சஹால் கழற்றி விடப்பட்டது ஏன்? மைக் ஹெசன் விளக்கம்

Mike Hesson
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக அடுத்த மாதம் துவங்க உள்ளது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய முதல் கோப்பையை இந்த வருடமாவது வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு வழக்கம் போல ஆர்சிபி ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக தோல்வியை சந்தித்தாலும் கூட கேப்டன் எம்எஸ் தோனி பெரும்பாலும் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்களை செய்ய மாட்டார்.

அதனாலேயே அவர் சென்னைக்காக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். ஆனால் அதற்கு அப்படியே நேர்மாறாக ஒரு சில தோல்விகள் சந்தித்தால் அதற்காக மாற்றங்கள் செய்கிறோம் என்ற பெயரில் முக்கிய வீரர்களை கழற்றி விடுவது பெங்களூரு அணியில் வாடிக்கையாக இருந்து வருகிறது.

- Advertisement -

காரணம் என்ன:
அந்த வரிசையில் 2013 முதல் 2021 வரை முதன்மை ஸ்பின்னராக 114 போட்டிகளில் விளையாடி தொட்டாலே சிக்சர் பறக்கக்கூடிய சின்னசாமி மைதானத்தில் தைரியமாக பந்து வீசி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த யுஸ்வேந்திர சஹாலை பெங்களூரு அணி நிர்வாகம் 2022 சீசனில் கழற்றி விட்டது. அப்போது பெங்களூரு அணிக்காக தொடர்ந்து விளையாட விரும்பியும் யாருமே தம்மை தொடர்பு கொள்ளாமல் கழற்றி விட்டதாக சஹால் ஆதங்கமாக பேட்டி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் 2022 ஏலத்தில் சஹாலை வாங்குவதற்கு போதிய பணம் இல்லாமல் போனதாக பெங்களூரு அணியின் முன்னாள் இயக்குனர் மைக் ஹெசன் கூறியுள்ளார். மேலும் நேரடி ஏலத்தில் வாங்க முயற்சித்த போது 65வதாக சஹால் பெயர் வந்ததால் தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சஹால் அதற்காக மிகவும் அதிருப்தியில் இருந்தார் என்பது எனக்கு தெரியும். அந்த நேரத்தில் ஏல இயக்கவியலை அவருக்கு விளக்க முயற்சிப்பது மிகவும் கடினமாக இருந்தது. அவர் மீது குறை கூறவில்லை. ஆர்சிபி அணியின் உண்மையான வீரராக இருந்ததால் அவர் விரக்தியடைந்தார். ஆனால் ஏலத்தில் நாங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை அவர் நன்கு அறிந்திருப்பார் என்று நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க: 4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு திரும்பும் கே.எல் ராகுல் – வெளியேறப்போகும் வீரர் யார் தெரியுமா?

“நாங்கள் 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்தோம். ஏனெனில் நாங்கள் ஹர்சல் பட்டேல் மற்றும் சஹால் ஆகிய இருவரையும் ஏலத்தில் வாங்க விரும்பினோம். அதற்காக 3 வீரர்களை மட்டும் தக்க வைத்ததால் எக்ஸ்ட்ரா 4 கோடிகள் எங்களுக்கு கிடைத்தது. ஆனால் ஐபிஎல் தொடரின் முதன்மை வீரராக இருந்தும் அவருடைய பெயர் டாப் 2 நட்சத்திர வீரர்களின் பட்டியலில் வராதது இப்போதும் எனக்கு விரக்தியாக இருக்கிறது. குறிப்பாக 65வது பெயராக வந்ததால் அவரை வாங்குவோம் என்று உத்தரவாதத்தை அளிப்பது எங்களுக்கு கடினமாக இருந்தது” என்று கூறினார்.

Advertisement