நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவருமான மைக் ஹெசன் தற்போது விராட் கோலியின் தலைமையில் விளையாடும் ஐபிஎல் அணியான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குனராக செயல்பட்டு வருகிறார். கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் துவங்குவதாக இருந்ததால் மார்ச் 5ஆம் தேதி இந்தியா வந்தார்.

மேலும் இந்தியா வந்தடைந்ததும் ஐபிஎல் தொடர்பான வேலைகளிலும், ஆர்சிபி அணிக்கு உண்டான பொறுப்பு வேலைகளிலும் ஈடுபட்டு வந்த அவர் ஐபிஎல் தொடர் முழுவதும் இந்தியாவிலேயே இருக்க திட்டமிட்டிருந்தார். இதற்கிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக பன்னாட்டு சர்வதேச விமானங்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டினர் அவர்கள் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது இந்தியாவில் அகப்பட்டு இருந்த மைக்ஹெசன் மீண்டும் நியூசிலாந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவே ஊரடங்கில் முடங்கி இருக்கும் வேளையில் அவரும் சொந்த நாடு திரும்பாத முடியாத நிலையில் எவ்வாறு நியூசிலாந்துக்கு (தாய்நாட்டுக்கு) திரும்புவார் என்று தவித்துக் கொண்டிருந்தார்.

இஇந்நிலையில் சொந்த நாடு திரும்ப இந்தியாவிலுள்ள நியூசிலாந்து நாட்டிற்கு தூதரகத்தை மைக் ஹெசன் அணுகினார். ஆனால் அவர்கள் மைக் ஹெசனை நியூசிலாந்துக்கு திரும்ப அனுப்பவுவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்து கொடுத்த சுமார் ஒரு மாதத்திற்கு மேல் ஆனது. தற்போது அவர் இந்தியாவிலிருந்து நியூசிலாந்துக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுத்த விமானம் மூலம் சென்று அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில் : மும்பை விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் பஸ்ஸில் ஒரு நாளுக்கு மேல் சிக்கி தவித்தேன். அதன் பிறகு தற்போது அருமையாக காட்சிகளை பார்க்கிறேன். இந்தியாவில் உள்ள அதிகாரிகள் நாங்கள் சொந்த நாடு திரும்புவதற்காக அற்புதமாக செயல்பட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்திய பிரதமர் மோடி, நியூசிலாந்து பிரதமர் மற்றும் இந்தியாவில் உள்ளநியூசிலாந்து வெளியுறவுத்துறை ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துகொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய தூதரகம் மற்றும் நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகிய அனைத்து அதிகாரிகளுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ்பரவி வரும் வேளையில் நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்று அந்த அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்து ஊரடங்கு உத்தரவையும் சற்று தளர்வு படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



