இந்த வருடம் ஆர்.சி.பி அணிக்கு இவங்கதான் ஒப்பனர்ஸ். உறுதி செய்த – பயிற்சியாளர் மைக் ஹெசன்

Hesson

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் விராட் கோலி ரோகித் சர்மா உடன் இணைந்து ஓபனிங் விளையாடினார். மிக சிறந்த முறையில் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா ஜோடி 9 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்தது. அணியின் வெற்றிக்கு அந்த ஓபனிங் பார்ட்னர்ஷிப் மிக முக்கியமாக இருந்தது. இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் ஐபிஎல் தொடரில் நான் ஓபனிங் இருக்கிறேன் என்று விராட் கோலி உறுதிப்படுத்தினார்.

rohith

இந்நிலையில் ஆர்சிபி அணியின் கிரிக்கெட் தலைமை நிர்வாகி மைக் ஹெஸ்சன்னும் விராட் கோலி ஓபனிங் ஆட போகிறார் என்று சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி பவர் பிளே ஓவர்களை எப்படி பயன்படுத்துவார் என்று அனைவரும் அறிவார்கள்.தொடக்கம் முதல் நின்று நன்றாக ஆடி அணியை கடைசி வரை எடுத்துச் செல்லும் யுக்தி அவருக்கு நன்றாக தெரியும். அதை அவர் காலம்காலமாக ஆர்சிபி அணிக்காக செய்து வந்துள்ளார்.

மேலும் அவர் ஓபனிங் ஆடினால் பின்னர் வரும் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் ஸ்கோரை செட் செய்துவிட்டுப் போவார். இந்த வருடம் படிக்கல் மற்றும் கோலி ஆகியோரே துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள். ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் குறித்த பிரச்சனை இந்த சீசனில் முடிவுக்கு வந்துள்ளது. எனவே கோலி ஓபனிங் ஆடுவது அணிக்கு நிச்சயம் பலத்தைக் கூட்டும் என்று மைக் தெரிவித்துள்ளார்.

இதுவரை 61 போட்டிகளில் ஓபனிங் இறங்கி விளையாடியுள்ள விராட்கோலி 2345 ரன்களை குவித்துள்ளார் அதில் அவர் 15 அரை சதங்களையும், 5 சதங்களையும் அடித்துள்ளார் என்பதும் அவரது ரன் அவரேஜ் விகிதம் 47.86 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் விகிதம் 140.17 என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Kohli-ABD

அது மட்டுமல்லாமல் அனைத்து கிரிக்கெட் வல்லுனர்களும், ஆர்சிபி ரசிகர்களும், விராட் கோலி ஓபனிங் ஆடுவதை அதிகமாக விரும்புகின்றனர். அவர் விரும்பியது போலவே விராட் கோலி இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஓபனிங் ஆட இருப்பது எல்லோரையும் திருப்தி படுத்தி உள்ளது.