அடக்கடவுளே டக் அவுட் ஆகி இப்படி ஒரு விசித்திர சாதனையை படைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் – விவரம் இதோ

Miguel
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 297 ரன்கள் குவித்தது.

rahul

- Advertisement -

அதனை தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 48 ரன்கள் அடித்தார். கேப்டன் ஹோல்டர் 39 ரன்களை அடித்தார். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரான கம்மின்ஸ் 45 பந்துகளைச் சந்தித்து டக் அவுட் ஆகினார்.,

இந்த டக்அவுட் மூலம் அவர் ஒரு உலக சாதனை ஒன்றினை படைத்துள்ளார். அந்த வித்தியாசமான உலகசாதனை யாதனின் களத்தில் அதிக நேரம் நின்று ஒரு ரன் கூட எடுக்காமல் கம்மின்ஸ் ஆட்டமிழந்து உள்ளார். அதாவது கிட்டத்தட்ட 95 நிமிடங்கள் அதாவது ஒன்றை மணி நேரத்திற்கு மேலாக களத்தில் நின்று டக் அவுட் ஆனார்.

Cummins

இதன்மூலம் அதிக நேரம் களத்தில் நின்று டக்அவுட் ஆன வீரர் என்ற சாதனையில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக 101 நிமிடங்கள் களத்தில் நின்று டக்அவுட் ஆகி நியூசிலாந்து வீரர் அலாட் இந்த சாதனையில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அடுத்த இடத்தில் தற்போது கம்மின்ஸ் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement