அந்த நாட்டு கிரிக்கெட் சீரழிவதற்கு காரணமே ஐபிஎல் தான் – மிக்கி ஆர்தர் குற்றச்சாட்டு

Arthur
- Advertisement -

ஐபிஎல் தொடரின் அபரித வளர்ச்சி மற்றும் வெற்றி காரணமாக 2022 சீசனில் புதிதாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டு 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த இந்த தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் 204 வீரர்கள் 551 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ளார்கள்.

IPL-bcci

- Advertisement -

இந்த ஏலத்தில் பல வீரர்கள் பல கோடி ரூபாய்களுக்கு ஒப்பந்தமானதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். இதையடுத்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் 2022 தொடர் ரசிகர்களை மகிழ்விக்க விரைவில் வருகிறது.

கடுப்பில் மிக்கி ஆர்தர்:
பணத்திலும் சரி தரத்திலும் சரி இமயத்தை தொட்டுள்ள ஐபிஎல் தொடர் மீது ஒரு சில வெளிநாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பயிற்சியாளர்களும் அவ்வப்போது விமர்சனம் செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் கிரிக்கெட் கெடுவதற்கு ஐபிஎல் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது என ஒரு சில முன்னாள் வீரர்கள் வெளிப்படையாகவே இதற்கு முன் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

ashes

அந்த வரிசையில் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி படுமோசமாக செயல்பட்டு வருவதற்கு ஐபிஎல் தான் காரணம் என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் குற்றம் சாட்டுகிறார். தற்போது இங்கிலாந்தில் உள்ள கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் டெர்பிஷைர் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவர் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி பற்றி பேசியது பின்வருமாறு. “இது பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமானால் இங்கிலாந்து தேவையான அளவுக்கு ரன்கள் அடிக்கவில்லை. அதற்காக நீங்கள் குற்றம் சொல்ல வேண்டுமானால் கவுண்டி கிரிக்கெட் மீது குற்றம் சுமத்த முடியாது” என கூறியுள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் தான் காரணம்:
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து 4 – 0 என்ற படு மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த தொடரில் அந்த அணியின் பந்துவீச்சு ஓரளவு சுமாராக இருந்த போதிலும் பேட்டிங் படுமோசமாக இருந்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதன் காரணமாக 2017இல் இங்கிலாந்து வெள்ளை பந்து கிரிக்கெட்டில் செய்த அதிரடி மாற்றங்களை போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மாற்றங்களை செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முயன்று வருகிறது.

arthur

ஆனால் அந்த தோல்விக்கு ஐபிஎல் தான் காரணம் என்று கூறும் மிக்கி ஆர்தர் பேசியது பின்வருமாறு. “மிக நீண்ட நாட்களாக விளையாடப்பட்டு வரும் கவுண்டி கிரிக்கெட் எப்போதுமே தரமான சர்வதேச வீரர்களை உருவாக்கி வருகிறது. எனவே கவுண்டி சிஸ்டத்தில் எந்த தவறும் இல்லை. இருப்பினும் இந்தத் தொடரை வலுப்படுத்த வேண்டும் என நினைத்தால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க செல்லும் வீரர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் இங்கிலாந்து அணி பங்கேற்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவர்கள் கவுண்டி போட்டியில் விளையாடாமல் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்கள். அதனால் டெஸ்ட் தொடரில் களமிறங்குவதற்கு முன்பாக இங்கிலாந்தின் முக்கிய வீரர்கள் பயிற்சி எடுக்கும் வண்ணம் கவுண்டி தொடரில் பங்கேற்க வேண்டும்” என கூறியுள்ளார்.

England

என்ன நியாயம்:
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதால் கவுண்டி சாம்பியன்ஷிப் உள்ளூர் கிரிக்கெட் தொடரை பல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் புறக்கணிப்பதாக மிக்கி ஆர்தர் குற்றம் சாட்டியுள்ளார். அதன் காரணமாக இங்கிலாந்து பங்கேற்கும் டெஸ்ட் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து வீரர்கள் முழுமையாக தயாராக முடியாமல் போவதாலேயே இங்கிலாந்து டெஸ்ட் அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில் ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க விடக்கூடாது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

அவரின் இந்த கருத்து பல இந்திய ரசிகர்களை கோபமடையச் செய்து உள்ளது என்றே கூறலாம். ஏனெனில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாடும் ஜோ ரூட், ஸ்டுவர்ட் ப்ராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற முதுகெலும்பு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதே கிடையாது. மேலும் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்ட்டோ, ஜோப்ரா ஆர்ச்சர் போன்ற ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்கள் கூட நாட்டுக்காக விளையாட வேண்டிய சூழ்நிலை வரும்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் இங்கிலாந்துக்கு விளையாட சென்றதை வரலாற்றில் பலமுறை பார்த்துள்ளோம்.

இதையும் படிங்க : தோனி என்னை முதன்முறையாக சி.எஸ்.கே அணியில் தேர்வு செய்ய இதுவே காரணம் – தீபக் சாகர் நெகிழ்ச்சி

அப்படியிருக்கையில் மோசமாக செயல்பட்டு வரும் இங்கிலாந்தின் பேட்டிங்கை வலுப்படுத்த தேவையான செயல்களில் ஈடுபடாமல் அதற்கு காரணம் ஐபிஎல் தான் என குற்றம் சுமத்துவது எந்த எந்த வகையில் நியாயம் என்ற நியாயமான கேள்வியை இந்திய ரசிகர்கள் எழுப்புகிறார்கள்.

Advertisement