தோனி என்னை முதன்முறையாக சி.எஸ்.கே அணியில் தேர்வு செய்ய இதுவே காரணம் – தீபக் சாகர் நெகிழ்ச்சி

deepak
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்காக நடந்த மெகா வீரர்கள் ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை பல கோடி ரூபாய்கள் செலவில் வாங்கி உள்ளன. மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற இந்த ஏலத்தின் முடிவில் 204 வீரர்கள் 551 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ளார்கள். இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக இந்தியாவின் இளம் வீரர் இஷான் கிசான் 15.25 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி சாதனை படைத்தார். அவருக்கு அடுத்தபடியாக இந்திய வீரர் தீபக் சாஹர் 14 கோடிகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகி அசத்தியுள்ளார்.

CSK

- Advertisement -

கலக்கும் தீபக் சஹர்:
இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு விலை போன இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை தீபக் சஹர் படைத்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு சென்னையின் முக்கிய பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார்.

சொல்லப்போனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் தோனியின் கீழ் விளையாட துவங்கிய பின்னரே இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மேலும் பவர்பிளே அவர்களில் மிகச் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்கும் திறமை படைத்துள்ள இவர் பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரை பெற்றுள்ளார். இதன் காரணமாக தற்போது மீண்டும் சென்னை அணிக்காக அவர் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Deepak

2016இல் ஏற்பட்ட சென்னை வாய்ப்பு:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் ஆரம்ப காலங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இருப்பினும் அதில் பெரிய அளவில் ஜொலிக்க முடியாத அவர் அதன் பின் சென்னை அணியில் விளையாடி தற்போது நட்சத்திரமாக உருவாக்கியுள்ளார் என்பதே உண்மையாகும். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி தீபக் சாஹர் மனம் திறந்துள்ளார்.

- Advertisement -

இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சென்னை அணியில் எனது பயணம் 2016இல் தொடங்கியது. அப்போது நான் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடிக்கொண்டிருந்தேன். அந்த வேளையில் அதிர்ஷ்டவசமாக சென்னை அணிக்கு தேர்வாகும் சோதனை பயிற்சியில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக கட்னிக்கர் இருந்தபோது ​​அவர் என்னை பயிற்சிக்கு அழைத்தார். அந்த இடத்தில் ஃப்ளெமிங் முன்னிலையில் நான் புதிய பந்தில் நன்றாக பந்துவீசியதுடன் 7வது இடத்தில் பேட்டிங் செய்து சில பவுண்டரிகள் மற்றும் பெரிய சிக்ஸர்களை அடித்து அரை சதம் அடித்தேன்.

deepak 1

2வது நாளில் நான் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அப்போது மீண்டும் 50 ரன்கள் எடுத்தேன். எனவே புனே அணியில் ஃப்ளெமிங் என்னைத் தேர்ந்தெடுத்தபோது நான் ஒரு பேட்டிங் ஆல்-ரவுண்டராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். பேட்டிங்கில் அதிரடியாகவும் புதிய பந்தில் ஸ்விங் பந்துகளை வீசக்கூடிய ஒருவராக நான் தேர்வு செய்யப்பட்டேன்” என கூறினார்.

- Advertisement -

கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை அணி சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தடைபெற்ற போது உருவாக்கப்பட்ட ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்கு கேப்டனாக தோனி செயல்பட்டார். அப்போது அந்த அணிக்கு தேவையான வீரர்களைத் தேர்வு செய்யும் பயிற்சி சோதனையில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலுமே அசத்தியதால் புனே அணிக்காக ஒரு ஆல்-ரவுண்டராக விளையாட தேர்வு செய்யப்பட்டதாக தற்போது தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.

deepak

10 பந்துகளில் 5 சிக்ஸர்:
அந்த சமயத்தில் நடந்தது பற்றி தீபக் சஹர் மேலும் பேசியது பின்வருமாறு. “புனே அணிக்கு நான் தேர்வு செய்யப்பட்ட போது ஒரு கேம்ப் நடந்தது. அதில் தோனியும் பங்கேற்றார். அப்போது நாங்கள் ஒரு பயிற்சிப் போட்டியில் விளையாடினோம். அதில் தோனியை முதல் முறையாக பார்த்தபோது நான் பேட்டிங் செய்து கொண்டிருந்தேன். 3வது இடத்தில் களமிறங்கிய நான் 10 பந்துகளை சந்தித்து அதில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு 30 ரன்கள் எடுத்த போது காயமடைந்ததால் வெளியேறும் நிலை ஏற்பட்டது. அப்போதுதான் தோனியை முதல் முறையாக நான் சந்தித்தேன். அந்த தருணத்தில் அவர் என்னிடம் இருந்த பெரிய சிக்ஸர்களை அடிக்கும் திறமையும் புதிய பந்துகளை ஸ்விங் செய்யும் திறமையையும் பார்த்தார்.

- Advertisement -

அதன் பின் அவர் என்னிடம் வந்து “அதிகமாக பயிற்சி எடுத்துக் கொண்டு தயாராக இரு. ஏனெனில் அடுத்த சீசனில் நாங்கள் உன்னை சென்னை அணியில் எடுக்க உள்ளோம். நீ அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவாய்” என கூறினார். அவர் இதை என்னிடம் 2017ம் ஆண்டு கூறினார். அதன்பின் கூறியது போலவே 2018 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக என்னை தேர்வு செய்தார்கள். சென்னைக்காக தேர்வு செய்தபின் அவர் என்னிடம் “நீ அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவாய் ஏனெனில் நாங்கள் உன்னை நம்புகிறோம். நீ உன்னால் முடிந்ததை மட்டும் செய்” என தோனி கூறினார்” என்று தீபக் சஹர் தெரிவித்துள்ளார்.

deepak 2

அதாவது 2016ஆம் ஆண்டு தோனி மற்றும் ஸ்டீபன் பிளமிங் முன்னிலையில் நடந்த பயிற்சி போட்டியில் 10 பந்துகளில் 5 சிக்சர்களை அடித்ததுடன் சிறப்பாக பவுலிங் செய்ததே தற்போது 14 கோடிகளுக்கு சென்னை அணி நம்பி வாங்கியதற்கு முக்கிய காரணம் என தீபக் சாஹர் பெருமையுடன் கூறியுள்ளார். சமீப காலமாகவே இந்தியாவுக்காக பேட்டிங்கில் 7, 8 போன்ற கீழ் வரிசையில் களமிறங்கும் அவர் கடைசி நேரத்தில் அதிரடியாக ரன்களை குவித்து வருகிறார்.

குறிப்பாக கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச் சென்ற அவர் கடந்த சில தினங்களுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த 3வது ஒருநாள் போட்டியில் கடைசி நேரத்தில் 38 பந்துகளில் 38 ரன்கள் அடித்து அசத்தினார். இப்படி பவுலிங் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அச்சத்தியன் காரணமாகவே இவரை சென்னை 14 கோடிகளுக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement