IND vs PAK : இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன் – பாக் பயிற்சியாளர்

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் முழுக்கவே பாகிஸ்தான் அணிக்கு சோதனை காலமாகவே உள்ளது. ஏனெனில் இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி உள்ள பாகிஸ்தான் அணி

Pak
- Advertisement -

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் முழுக்கவே பாகிஸ்தான் அணிக்கு சோதனை காலமாகவே உள்ளது. ஏனெனில் இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி உள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் தடைபட்டது இதனால் பாகிஸ்தான் அணி 5 புள்ளிகள் மட்டுமே பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.

Shankar 1

- Advertisement -

மேலும் பாகிஸ்தான் ரசிகர்கள் அந்த அணி வீரர்களை வசைபாடிய வண்ணமும் உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில் இனிவரும் போட்டிகளில் பாகிஸ்தான் வரிசையாக வெற்றி பெற்றால் மட்டுமே செமி பைனல் செல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. முக்கியமாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி அடைந்த தோல்வி பாகிஸ்தான் ரசிகர்களை மிகுந்த கோபத்துக்குள்ளாக்கியது.

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி டிஎல்எஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியினால் பாகிஸ்தான் அணி வீரர்கள் மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானார்கள். மேலும் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் இந்தியாவுடனான ஏற்பட்ட தோல்விக்கு பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Pakistan

இதுகுறித்து மிக்கி ஆர்தர் கூறியதாவது : கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட நினைத்தேன். ஏனெனில் அந்த அளவுக்கு மன அழுத்தம் என்னுள் இருந்தது. ஆனால் இது ஒரு போட்டி மட்டுமே எல்லாத்துக்கும் முடிவு ஆகிவிடாது வரும் போட்டிகளில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாட வைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் இந்தியாவுடனான தோல்வியை மறந்து அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மிக்கி ஆர்தர் கூறினார்.

Advertisement