PAK vs RSA : இவரின் ஆட்டம் வேறலெவலில் இருந்தது. அதுவே வெற்றிக்கு காரணம் – பாக் பயிற்சியாளர்

உலகக் கோப்பை தொடரின் 30 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சர்பிராஸ் அகமது தலைமையிலான ஒரு பாகிஸ்தான் அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமை

Pak
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 30 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சர்பிராஸ் அகமது தலைமையிலான ஒரு பாகிஸ்தான் அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின.

pak vs rsa

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் சோஹைல் 89 ரன்களும், பாபர் அசாம் 69 ரன்களும் குவித்தனர்.

பின்னர் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 259 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஹாரிஸ் சோஹைல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Sohail

போட்டிக்கு பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியதாவது : இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. பேட்டிங் துறையில் சிறப்பாக விளையாடியது அதிலும் குறிப்பாக ஹாரிஸ் சோஹைல் 59 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மேலும் அவர் அடித்த 9 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அவரின் ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது. அவர் ஆடிய விதம் மிக சிறப்பாக இருந்தது இனிவரும் போட்டியில் அவர் தொடர்ந்து இது போன்ற சிறப்பான அடுத்த வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன் என்று மிக்கி ஆர்தர் கூறினார்.

Advertisement