ஏற்கனவே நொந்து போயி இருக்கோம். ப்ளீஸ் எங்களை விமர்சிக்க வேண்டாம் – புலம்பிய இலங்கை பயிற்சியாளர்

Arthur
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆனது தற்போது நடைபெற்று வருகிறது. முதன்மை இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் இருப்பதால் ஷிகார் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் விளையாடி வருகிறது. அதேபோன்று இங்கிலாந்து தொடரை முடித்து நாடு திரும்பிய இலங்கை அணியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக இலங்கை அணி தற்போது தசுன் ஷனகா தலைமையில் ஒரு புதிய அணியுடன் விளையாடி வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் இலங்கை அணி இந்த தொடரில் ஆவது வெற்றி பெற்று சற்று நிம்மதி அடைவார்கள் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் முதலில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து இந்திய அணியிடம் 2 க்கு 0 என்ற கணக்கில் தொடரை இழந்து உள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றபோது ஒரு கட்டத்தில் இலங்கை அணி எளிதாக வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இறுதியில் இந்திய அணி வெற்றிக்கு அருகில் வர வர அந்த அணியின் பயிற்சியாளர் மிக்க ஆர்தர் விரக்தியின் உச்சத்திற்கே சென்றார். மேலும் அவர் கோபமடையும் சில சுபாவங்களையும் நாம் தொலைக்காட்சியில் வாயிலாக பார்க்க முடிந்தது.

அதனைத் தொடர்ந்து இந்திய அணி வெற்றி பெற்றவுடன் நேரடியாக மைதானத்திற்கு வந்த பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் இலங்கை கேப்டன் ஷனகாவுடன் மைதானத்தின் நடுவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர்கள் இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனைக்கண்ட இலங்கை அணியின் முன்னாள் வீரர் முரளிதரன், ரசல் அர்னால்டு ஆகியோர் கூட மிக்கி ஆர்தர் செய்த இந்த செயலினை விமர்சித்தனர். மேலும் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களும் இந்த செயலை விமர்சித்து வந்தனர்.

Arthur

இந்நிலையில் தற்போது அதற்கு பதிலளித்த மிக்கி ஆர்தர் “எங்களுக்குள் நடந்தது ஒரு ஆரோக்கியமான உரையாடல் தான்”, “நாங்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளவில்லை” ஏற்கனவே நாங்கள் தொடர் தோல்வியால் விரக்தியில் உள்ளோம் தயவு செய்து எங்களை விமர்சிக்க வேண்டாம் என அவர் வேண்டுகோள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement