என் கதை முடிந்தது போல் அவர் கதையும் முடிந்து விடக்கூடாது..! புலம்பும் வேகப்பந்து வீச்சாளர்..! – யார்,எதற்கு தெரியுமா..?

- Advertisement -

2006 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கவிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலி அணியில் விளையாடிய மிக் லூயிஸ் 113 ரன்கள கொடுத்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான உலக சாதனையை படைத்தார். அந்த போட்டி இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மோசமான சறுக்களாக அமைந்தது.
mick lewis

இதே போட்டியில் ஜாக் காலிஸ் 6 ஓவர்களில் 70 ரன்களை விட்டுக்கொடுத்தார், ஒருவேளை இவர் தன் முழு 10 ஓவர்களை வீசியிருந்தால் இவர் கொடுத்த ரன்கள் உலக சாதனையாகியிருக்கலாம். ஆனால் விதி மிக் லூயிஸ் அதிர்ஷ்டம் கொஞ்சம் கூட இல்லாமல் போனது. இதனால் தென்னாபிரிக்கவிற்கு எதிரான போட்டியே அவரது கடைசி ஒருநாள் போட்டியாகவும் அமைந்துவிட்டது

இதே போன்று சமீபத்தில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆண்ட்ரியு டை 9 ஓவர்களில் 100 ரன்களை வழங்கியது தற்போது மிக பெரிய விவாதமாக மாறியுள்ளது. சமீபத்தில் இதுகுறித்து பேசிய க் லூயிஸ் தான் அதிக ரன் கொடுத்த போட்டியையும் நினைவு கூர்ந்தார். அதுகுறித்த அவர் தெரிவிக்கையில் ‘ அன்றைய தினம் மிக மோசமான நாள் , அந்த போட்டிக்கு பிறகு விக்டோரியாவில் இரண்டு உலகச் சாதனையாளர்கள் இருக்கின்றனர் என்று தான் நான் பார்க்கிறேன்.
tye

அதில் ஒன்று அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஷேன் வார்ன் மற்றொன்று அதிக ரன்களை கொடுத்த நான். அதுவே எனக்கு கடைசி போட்டியாக அமைந்து விட்டது. அதே போன்று ஆஸ்திரேலிய வீரரான ஆண்ட்ரியு டைக்கும் நேர்ந்துவிட கூடாது .’ என்று மிகவும் உருக்கமுடன் கூறியுள்ளார்.

- Advertisement -
Advertisement