ஐ.பி.எல் தொடரால் கிடைக்கும் பணத்தை விட எனக்கு இதுதான் பெருசு. அதான் ஐ.பி.எல் ஆடுறதில்ல – மிட்சல் ஸ்டார்க் ஓபன்டாக்

Starc
- Advertisement -

சர்வதேச அளவில் கோடி கோடியாக பணம் கொழிக்கும் ஒரு தொடராக பார்க்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட ஏகப்பட்ட வீரர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தேசிய அணிக்காக ஒரு ஆண்டு முழுவதும் விளையாடி கிடைக்காத பணம் இரண்டு மாத ஐபிஎல் தொடரில் பெருமளவு கிடைக்கும் என்பதனால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுமட்டும் இன்றி சில வீரர்கள் தங்களது தேசிய ஒப்பந்தத்த்தில் இருந்து வெளியேறி கூட ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். அந்த அளவிற்கு ஐபிஎல் தொடரால் ஒவ்வொரு வீரர்களும் கோடி கோடியாய் சம்பாதித்தும் வருகின்றனர்.

Mitchell starc

- Advertisement -

இப்படி பல வீரர்கள் பணத்திற்காக ஐபிஎல் தொடரில் விளையாடினாலும் ஒரு சில வீரர்கள் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டுள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் தான் ஏன் ஐபிஎல் தொடரை தவிர்த்து வருகிறேன் என்பது குறித்த காரணத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். உலகின் எந்த டி20 லீக் போட்டிகளின் ஏலத்திற்கு சென்றாலும் அவரை போட்டி போட்டுக் கொண்டு ஏலத்தில் வாங்க அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள் என்றாலும் அவர் எவ்வித டி20 லீக் தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

கடந்த 2014-15 ஆம் ஆண்டுகளில் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் தொடரில் 27 போட்டிகளில் விளையாடிய மிட்சல் ஸ்டார்க் அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக 9.4 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்தாலும் அந்த தொடரில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் 33 வயதான மிட்சல் ஸ்டார்க் ஏன் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில்லை என்பது குறித்த அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது : ஐபிஎல் தொடரில் கிடைக்கும் பணத்தைவிட எனக்கு ஆஸ்திரேலியாவிற்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற ஆசை மட்டுமே பெரியதாக இருக்கிறது.

Mitchell Starc

ஆஸ்திரேலிய அணிக்காக நான் நீண்ட தூரம் பயணிக்க வேண்டுமெனில் ஒரு சில விடயங்களை தவிர்த்துதான் ஆக வேண்டும். அந்த வகையில் தான் நான் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில்லை எனக்கு ஐபிஎல் தொடரில் விளையாடி கிடைக்கும் பணத்தைவிட ஆஸ்திரேலிய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே எனது லட்சியம். அதன் காரணமாகவே நான் இதுபோன்ற டி20 லீக் தொடர்களை தவிர்த்து வருகிறேன். மேலும் எனது இடத்திற்கு கூடிய விரைவில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் வரலாம்.

- Advertisement -

ஆகையால் நான் என்னுடைய கரியரை சரியாக நிறைவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறேன். எனவே என்னுடைய செயல்பாட்டை சரியாக கட்டமைக்க ஒரு சில முடிவுகளை நான் எடுத்து தான் ஆக வேண்டும். இன்னும் சில காலங்களில் என்னுடைய வேகம் குறையலாம். அதோடு என்னுடைய இடத்திற்கு புது வேகப்பந்து வீச்சாளர்களும் வரலாம். எனவே நான் என்னுடைய உடற்தகுதியையும் திறனையும் சரியாக வைத்துக் கொள்ளவே சில முடிவுகளை யோசித்து எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : WTC Final : ஓவல் மைதானம் எப்படி? மழை வருமா – இந்தியாவின் வரலாற்று புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

ஆஸ்திரேலியா அணிக்காக இன்னும் சில ஆண்டுகள் விளையாடி 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம் என மிட்சல் ஸ்டார்க் கூறியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மிட்சல் ஸ்டார்க் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 306 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement