மீண்டும் இந்திய ரசிகர்களிடம் வசமாக சிக்கிய மைக்கல் வாஹன். வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – சரியான காரணம் தான்

Vaughan
- Advertisement -

இங்கிலாந்து அணி அயர்லாந்து அணிக்கு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 85 ரன்களில் முதல் இன்னிங்சை இழந்தது. இங்கிலாந்தின் இந்த ஆட்டத்தினையும், மைக்கல் வாஹனயும் தற்போது இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகின்றனர்.

Vaughan

- Advertisement -

அதற்கு காரணம் யாதெனில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் இந்த வருட ஆரம்பத்தில் ஜனவரி மாதம் 31ம் தேதி இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனை குறிப்பிட்டு மைக்கேல் வாஹன் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்து குறிப்பிட்டதாவது : 92 ரன்களில் இந்தியா ஆல்-அவுட் ஆனது என்னால் நம்ப முடியவில்லை. இது போன்ற இந்த நவீன நாட்களில் 100 ரன்களுக்கும் குறைவாக இந்திய அணி ஆட்டம் இழந்திருப்பது என்னால் நம்பமுடியவில்லை என்று இந்திய அணியை கேலி செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

ire-1

அதனைத் தொடர்ந்து தற்போது அயர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 85 ரன்கள் ஆல் அவுட் ஆனதால் இந்திய ரசிகர்கள் அனைவரும் உலக சாம்பியனான இங்கிலாந்து அணி 85 ரன்கள் ஆல் அவுட் ஆனதை எங்களால் நம்பவே முடியவில்லை என்பது போன்று தொடர்ந்து சமூகவலைதளத்தில் மைக்கல் வாஹனை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement